Thanjavur Temple Chariot: உயிரிழந்தவருக்கு பேரவையில் இரங்கல்; 2 நிமிட மௌன அஞ்சலி

Tamil Nadu Temple Chariot: தேர் திருவிழாவில் எதிர்பாராத விதமாக தேர் மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து இரங்கல்  தீர்மானத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்தார்.  

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 27, 2022, 12:13 PM IST
Thanjavur Temple Chariot: உயிரிழந்தவருக்கு பேரவையில் இரங்கல்; 2 நிமிட மௌன அஞ்சலி title=

சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் மின்சார விபத்தில் உயிரிழந்தவருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற சட்டபேரவை கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற தேர் திருவிழாவில் எதிர்பாராத விதமாக தேர் மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து இரங்கல்  தீர்மானத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.

அப்போது பேசிய தமிழ்நாடு முதல்வர், "தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் மின்சார விபத்தில் உயிரிழந்தவருக்கு தலா 5 லட்சம் ரூபாய், உடனடியாக வழங்கவும், மேலும் படுகாயமடைந்தவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும், விபத்து பகுதியில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனடியாக தஞ்சைக்கு விரைந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தை நேரில் சந்திக்க உள்ளேன். அதோடு காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க உள்ளேன் எனத் தெரிவித்தார்.

அதன் பின்னர்  அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினா்.

மேலும் படிக்க: Tamil Nadu Temple Chariot: தேரில் மின்சாரம் பாய்ந்து 12 பேர் பலி! தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி

முன்னதாக தஞ்சாவூர் களிமேடு கிராமத்தில் உள்ள பிரபல அப்பர் கோயிவிலின் 94வது ஆண்டு சித்திரை திருவிழா நடைபெற்று வருவதால், அதையொட்டி சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கியது. மேலும் களிமேடு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக தேரோட்டம் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டது. 

சுமார் 3 மணியளவில் களிமேடு பகுதியில் உள்ள பூதலூர் சாலை பகுதிக்கு தேர் இழுத்து வரப்பட்ட போது, அங்கிருந்த உயர்மின் அழுத்த கம்பி மீது தேர் உரசியதால், தேர் மீது மின்சாரம் பாய்ந்தால், அதன் அருகில் இருந்தவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த மின்சார விபத்தில் 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் பலத்த  காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

தஞ்சை தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர உட்பட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: அரசு விடுதிகளில் முறைகேடுகளில் ஈடுபடும் விடுதி காப்பாளர்கள் - அதிர்ச்சி தகவல்

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டின் தஞ்சையில் தேர் திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்த சம்பவத்தால் மிகுந்த மனவேதனையடைந்தேன். இந்த துக்கமான சமயத்தில் உறவுகளை இழந்த வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறன். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல், தஞ்சை தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாய் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

 

குடியரசு தலைவரின் டுவிட்டர் பக்கத்தில், "தஞ்சையில் தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து குழந்தைகள் உள்பட பலர் உயிரிழந்துள்ள சம்பவம் வார்த்தைகளால் விவரிக்கமுடியாத சோகம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

 

மேலும் படிக்க: கலைஞர் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்! முதல்வர் அறிவிப்பிற்கு பிற கட்சிகள் வரவேற்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News