School Strike: தன்னிச்சையாக விடுமுறை அளிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: எச்சரிக்கை

Schools NOT Closed in Tamil Nadu: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக நிகழ்ந்த வன்முறை சம்பவங்களால் தமிழகம் முழுவதும் பள்ளிகள் இயங்காது என்று அறிவிப்புக்கு பள்ளிக்கல்வித் துறை தடை விதித்துள்ளது  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 18, 2022, 08:39 AM IST
  • தமிழ்நாட்டில் பள்ளிகள் இன்று வழக்கம்போல் இயங்கும்
  • தன்னிச்சையாக விடுமுறை அளிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை
  • பள்ளிக்கல்வித்துறை விடுத்துள்ள எச்சரிக்கை
School Strike: தன்னிச்சையாக விடுமுறை அளிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: எச்சரிக்கை title=

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. சின்ன சேலம் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக தன்னிச்சையாக விடுமுறை அளிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் தனியார் பள்ளி விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி, நேற்று முன்தினம்  மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக உருவெடுத்து, தொடர்புடைய பள்ளிக்கூடம் சூறையாடப்பட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இன்று பள்ளிகள் இயங்காது என அறிவித்தன.

இதற்கு தடை விதித்துள்ள தமிழக பள்ளி கல்வித்துறை, தமிழ்நாட்டில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் எஎன்றும், தன்னிச்சையாக விடுமுறை அளிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மேலும் படிக்க | போராட்டத்தில் மாணவியின் உறவினர்கள் யாரும் பங்கேற்கவில்லை - மாணவி தரப்பு வழக்கறிஞர்

கடந்த 13ஆம் தேதி அதிகாலையில், பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து மாணவி ஸ்ரீமதி குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது உடற்கூராய்வுயில் சந்தேகத்திற்குரிய காயங்கள் இருப்பதால், மாணவியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கள்ளக்குறிச்சியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Kallakurichi Violence

மாணவி ஸ்ரீமதியின் உடலில் இருந்த காயங்கள், அவர் இறப்பதற்கு முன் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், மாணவியின் உடைகளில் இருந்த ரத்தக் கறைகள் சந்தேகத்தை மேலும் அதிகரித்தது. இந்த நிலையில், ஸ்ரீமதி தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று மாணவியின் தாய் குற்றஞ்சாட்டியிருந்தார்.

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு மாணவியின் தாய்தான் காரணம் - பள்ளி செயலாளரின் ஆவேச வீடியோ

இந்தச் சூழலில் நேற்று கள்ளக்குறிச்சி-சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில், மாணவி ஸ்ரீமதிக்கு  நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் சாலை மறியல் செய்தனர். அதில் ஏற்பட்ட வன்முறைகள் அனைவரையும் அதிர வைத்தது. அப்போது திடீரென போராட்டக்காரர்கள் காவல் துறையினர் மீது கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இதில் போலீசார் பலர் காயம் அடைந்தனர். மேலும் அங்கிருந்த வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டவுடன் காவல் துறையினர் துப்பாக்கிச்சூடும் நடத்தினர். 

Kallakurichi Violence

இதையடுத்து, பள்ளி தாக்கப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் , பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்காது என அறிவித்த தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு போராட்டம் அறிவித்தது. தற்போது இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாட்டில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் எஎன்றும், தன்னிச்சையாக விடுமுறை அளிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க | மாணவி இறப்புக்கு ஸ்டாலின்தான் காரணம் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News