TN COVID-19 Update: இன்று கொரோனா பாதிப்பு 17000க்கும் குறைவு

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 16,813 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 10, 2021, 07:56 PM IST
  • தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 16,813 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
  • இன்று தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 358 பேர் இறந்தனர்.
  • தமிழ்நாட்டில் இன்று 32,049 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர்.
TN COVID-19 Update: இன்று கொரோனா பாதிப்பு 17000க்கும் குறைவு  title=

TN Corona Update: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக  குறைந்துகொண்டு வருகிறது. மிக அதிகமாக இருந்த ஒரு நாள் தொற்றின் அளவு தமிழகத்தில் தற்போது வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 16,813 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தொற்றால் பாதிக்கப்பட்ட 358 பேர் இறந்தனர். தமிழ்நாட்டில் இன்று 32,049 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். 

corona

முன்னதாக, தமிழகத்தில் மே 24 முதல் முதல் தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

ஜூன் 7 ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதாக அரசு தெரிவித்தது. இந்த ஊரடங்கு ஜூன் 7 முதல் சில தளர்வுகளுடன் மெலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்படுவதாக சனிக்கிழமையன்று தமிழக அரசு அறிவித்தது. ஊரடங்கால் தொற்றின் அளவில் சாதகமான விளைவுகள் காணக்கிடைத்துள்ளன. 

தமிழ்நாட்டு அரசின் சார்பில், மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்பநலத்துறை தினசரி அடிப்படையில்,  மாவட்ட வாரியாக கொரோனா நிலவரத்தை வெளியிட்டு வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆராய தமிழக முதல்வர் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறார். அந்த வகையில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மேற்பார்வையிட ஜூன் 12 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் செல்கிறார் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகமாக இருந்த நிலையில், இரண்டாம் அலை தீயாய் பரவத் தொடங்கிய நிலையில், மு.க. ஸ்டாலின் (MK Stalin) தலைமையிலான திமுக அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பேற்றது. பொறுப்பேற்ற நாள் முதலே தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ALSO READ: TN School Update: தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News