தமிழ்நாடு ஆளுநர் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மனுக்கள் எக்காரணமும் கேட்காமல் நிலுவையில் வைத்திருப்பதாக தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டி வந்ததுடன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. இதில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, பி.வில்சன் ஆகியோர் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரானார்கள். அப்போது, கைதிகளை முன்கூட்டியே விடுவிக்கும் கோப்பு, அரசு பணி நியனம் தொடர்பான கோப்புகள், உள்ளிட்ட 12 கோப்புகள் மீது எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்துகிறார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
கோப்புகளில் ஏதேனும் விளக்கம் தேவை இருந்தால் அதனை கேட்டு கோப்புகளை திருப்ப அனுப்பலாம். ஆனால் எந்தவித காரணமும் இன்றி அரசின் செயல்பாட்டை முடக்கும் வகையில் தமிழ்நாடு அளுநரின் செயல்பாடு இருக்கிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, பஞ்சாப் முதல் தமிழ்நாடு வரை ஆளுநர்களின் செயல்பாடு ஒரே மாதிரியாக இருப்பதாகவும் தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும் அரசியலமைப்பு சட்டத்தில் சட்டப்பிரிவு 200 -ல் உள்ள As Soon As Possible என்ற வார்த்தையை தவறாக ஆளுநர் புரிந்து கொண்டு காலம் தாழ்த்திக் கொண்டிருப்பதாகவும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதனைக் கேட்டுக் கொண்ட தலைமை நீதிபதி, ஆளுநர் செயல்பாடு குறித்து தமிழ்நாடு அரசு எழுப்பியிருக்கும் விவகாரம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவித்தார். மேலும், ஒரு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் விளக்கம் கேட்டு அனுப்பலாம், ஆனால் சட்டப்பேரவையில் மீண்டும் அதே மதோசா நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் கோப்புகளை ஆளுநர் மீண்டும் திருப்பி அனுப்ப முடியாது, கையெழுத்திட்டாக வேண்டும் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.
இந்த விவகாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் தீபாவளிக்குப் பிறகு வரும் திங்கட்கிழமைக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாமா? என தமிழ்நாடு அரசிடம் தலைமை நீதிபதி கேட்டதோடு, அன்றைய தினத்துக்கு வழக்கை ஒத்திவைத்தார். அத்துடன் ஆளுநர் ஏன் கோப்புகளில் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்துகிறார் என்பதற்கு அவர் சார்பில் பதில் அளிக்க வேண்டும் என கூறிய தலைமை நீதிபதி இது தொடர்பாக ஆளுநரின் செயலாளர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டார்.
மேலும் படிக்க | மீண்டும் வருகிறதா ஆன்லைன் ரம்மி... உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ