கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூர் கிராம சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த 2000 மாணவ மாணவிகள் தங்களுடைய பிறப்பு சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மற்றும் சாதி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதில் 180 மாணவ மாணவிகள் வேறு பள்ளியில் படிக்கப் போவதாகவும் பள்ளி நிர்வாகத்தில் விண்ணப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கிராம சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்ற பெரும் வன்முறை சம்பவத்தில், பள்ளி அடுத்து நொறுக்கப்பட்டு பள்ளியில் உள்ள உடைமைகள் அனைத்தும் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இந்த வன்முறை சம்பவங்களால், அந்த பள்ளியில் பயின்று வந்த 3000 திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்த மாணவர்கள் அனைவருடைய சான்றிதழ்கள் அனைத்தும் தீயில் எரிந்ததால் மாணவர்களுடைய அனைத்து சான்றிதழ்களையும் மீண்டும் வழங்க அரசு தரப்பில் முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி மாணவி வீடியோக்களை வலைதளத்தில் பதிவிட்டால் நடவடிக்கை
அதன்படி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷர்வன் குமாரும் மாணவர்களுக்கு சான்றிதழ் அளிக்கப்படும் என உறுதி அளித்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவதற்காக தனி அலுவலகம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள அகிலா மற்றும் ராஜு ஆகியோரது தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த 2000 மாணவ மாணவிகள் தங்களுடைய சான்றிதழ்கள் வேண்டுமென விண்ணப்பித்துள்ளனர்.
மேலும் படிக்க | சிதைக்கப்பட்ட சின்னசேலம் தனியார் பள்ளியை சீரமைத்து வகுப்புகள் தொடங்குவது எப்போது
இதில் 180 மாணவ மாணவிகள் வேறு பள்ளியில் படிக்கப் போவதாகவும் விண்ணப்பித்துள்ளனர். வேறு பள்ளியில் சென்று படிப்பதற்கு விண்ணப்பித்துள்ள மாணவ மாணவிகள் அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு வேறு பள்ளியில் படிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | கலவரத்தில் எடுத்து சென்ற பொருட்களை சாலையோரம் வீசி சென்ற பொதுமக்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ