திமுகவை கடுமையாக விமர்சித்த எஸ்பி வேலுமணி... பாஜக குறித்து கப்சிப்..!

அதிமுகவுக்கு எதிராக கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்துத் திணிப்பு நடக்கிறது என அதிமுக அமைப்பு செயலாளர் எஸ்.பி.வேலுமணி விமர்சித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 9, 2024, 08:40 AM IST
  • அதிமுகவுக்கு எதிராக கருத்து கணிப்பு
  • அது வெறும் திணிக்கப்படும் கருத்துகள்
  • கோவையில் எஸ்பி வேலுமணி விமர்சனம்
திமுகவை கடுமையாக விமர்சித்த எஸ்பி வேலுமணி... பாஜக குறித்து கப்சிப்..! title=

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூரில் அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக அமைப்பு செயலாளர் எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் எஸ்பி வேலுமணி பேசுகையில், திமுக ஆட்சி அமைந்து மூன்று ஆண்டுகள் ஆகிய நிலையில் கோவைக்கு புதிதாக எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தான் முதல்வர் ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்து வருகிறார். வாக்களித்த மக்களுக்கு சொத்துவரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு என விலைவாசி உயர்வை பரிசாக திமுக அரசு கொடுத்துள்ளது. 

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் INDIA vs NDA... யாருக்கு அதிக ஆதரவு - வெளியான புதிய சர்வே

திமுகவுக்கு எப்போதும் வாக்களிக்கும் அரசு ஊழியர்களை இந்த ஆட்சி வேண்டாம் என எண்ணுகின்றனர். எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சர் ஆவார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணி தான் வெற்றி பெறும் என தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், நாடாளுமன்றத் தேர்தலுக்கான கருத்துக் கணிப்பு என்ற பெயரில் வெளிவருவது எல்லாமே கருத்துக் குறிப்புகள் மட்டுமே. திமுகவை பலமாக இருப்பதாக கட்டமைக்க முயல்கின்றனர். 

இது போன்ற கருத்து திணிப்புகளால் அதிமுகவின் வெற்றியை தடுக்க முடியாது. திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது. அதிமுக ஆட்சியின் போது ஆர்.எஸ் புரம் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வானது. ஆனால் தற்போது தமிழகத்தில் அது போன்ற நிலை இல்லை என தெரிவித்தார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பாஜக குறித்து எஸ்பி வேலுமணி எங்கும் பேசவில்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார். 

இதனால், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுகவை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார். இதற்கு பதிலடியாக ஆர்பி உதயகுமார், ஜெயக்குமார் ஆகியோர் அண்ணாமலையை விமர்சித்துக் கொண்டிருக்கிறார். இந்த சூழலில் எஸ்பி வேலுமணி ஒரு வார்த்தைகூட எங்கும் பாஜக குறித்து பேசாமல், திமுகவை மட்டும் விமர்சித்துவிட்டு சென்றார். 

மேலும் படிக்க | மயிலாப்பூர் கோவில் விவகாரம்: தீவிரவாத செயல் இல்லை - அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News