ஸ்டாலின் - சீதாராம் யெச்சூரி சந்திப்பு: 2019 பாராளுமன்ற தேர்தலில் இணைந்து பணியாற்ற முடிவு

பாஜகவுக்கு எதிராக 2019 பாராளுமன்ற தேர்தலில் திமுகவுடன் இணைந்து பணியாற்ற முடிவு என சிபிஐ (எம்) தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 13, 2018, 07:01 PM IST
ஸ்டாலின் - சீதாராம் யெச்சூரி சந்திப்பு: 2019 பாராளுமன்ற தேர்தலில் இணைந்து பணியாற்ற முடிவு title=

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் சீதாராம் யெச்சூரி இன்று சந்தித்து பேசினார். 

2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பாஜக-வுக்கு எதிராக தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் ஒன்று இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்ச்சி நடைபெற்று வருகிறது. 

அதன் ஒருபகுதியாக கடந்த 9 ஆம் தேதி திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேசினார்.

இந்நிலையில், இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் இல்லத்திற்கு வந்து அவரை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சீதாராம் யெச்சூரி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க.வுடன் சேர்ந்து நாங்கள் பணியாற்ற முடிவு செய்துள்ளோம். இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இந்திய மக்களின் ஒற்றுமை ஆகியவற்றை பாதுகாப்பதில் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். இதனால் ஒன்றாக இணைந்து வரும் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அணிதிரள முடிவு செய்துள்ளோம் என சிபிஐ (எம்) தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

 

Trending News