செந்தில் பாலாஜி கைதுக்கு பிறகு கொதிப்பில் கொங்கு மண்டலம்...தேர்தலில் எதிரொலிக்கும் - சபாநாயகர்

அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைது நாடாளுமன்ற தேர்தலில் அனுதாபத்தைதான் ஏற்படுத்தும். அமைச்சரின் கைதால்  கொங்கு மண்டலமே கொதித்து போய் உள்ளதாக தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 19, 2023, 05:40 PM IST
  • செந்தில் பாலாஜி கைதுக்கு கண்டனம்
  • கொங்கு மண்டலம் கொதிப்பில் உள்ளது
  • வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்
செந்தில் பாலாஜி கைதுக்கு பிறகு கொதிப்பில் கொங்கு மண்டலம்...தேர்தலில் எதிரொலிக்கும் - சபாநாயகர் title=

கடந்தவாரம் திடீரென அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனைக்கு வந்த அமலாக்கதுறை அதிகாரிகள், சுமார் 17 மணி நேரத்துக்கும் மேலாக அவருக்கும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தினர். இரவிலும் சோதனை தொடர்ந்தபோதே அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் திமுகவும், தமிழக அரசும் எச்சரிக்கையாகவே இருந்தது. எதிர்பார்த்ததுபோலவே அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனால், பாதி வழியில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் உடனடியாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை கொடுத்து கண்காணித்து வருகின்றனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் தேசிய அரசியலிலும் எதிரொலித்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் செந்தில் பாலாஜி வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் அவரது கைதுக்கும் தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர்.

மேலும் படிக்க | டாஸ்மாக்கில் ஓவர் டைம்ல மதுவிற்பனை இருந்தால் தடுக்கப்படும் - அமைச்சர் முத்துசாமி

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, செந்தில் பாலாஜியின் கைதுக்குப் பிறகு கொங்கு மண்டலம் கொதித்துப்போய் இருப்பதாகவும், இது வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று கூறினார். ஆவடியில் அமைக்கப்பட்டுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய கிளையை சபாநாயகர் அப்பாவு, ஆவடி சட்டமன்ற உறுப்பினர் நாசர் ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு "ஆளுநர் அரசுக்கு நெருக்கடி தர முடியாது. அவருக்கு ஒரு எல்லை உள்ளது. 

ஆளும் அரசுக்கு ஆளுநர் நெருக்கடி தரும் போக்கை நிறுத்திக்கொண்டால் அது அவருக்கு நல்லது. முதலமைச்சர் கூறினால் தவிர யாரும் செந்தில் பாலாஜியை  அமைச்சர் பதவியிலிருந்து நீக்க முடியாது. வழக்கு இருக்கும், கைது இருக்கும், நீதிமன்ற காவல் இருக்கும். இதனால் பதவி இழக்க அவசியம் இல்லை. தமிழக முதலமைச்சர் கோழையல்ல, வீரமானவர் விவேகமானவர். யாருக்கும் பயப்பட வேண்டியது இல்லை" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மாணவர்களுக்கு நலத்திட்ங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் திராவிட தலைவர்கள் பற்றி பேச மறந்திருப்பார்,  அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது நாடாளுமன்ற தேர்தலில் அனுதாபத்தை தான் ஏற்படுத்தும் என்றார். அமைச்சரின் கைதால் கொங்கு மண்டலமே கொதித்து போய் உள்ளது என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

மேலும் படிக்க | போதையில் பரதநாட்டியம் போட்ட குடிமகன் - குமாரபாளையத்தில் அட்டகாசம்: வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News