ஹஜ் பயணத்துக்கு ரூ. 6 கோடி மானியம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகையொட்டி முஸ்லீம்கள் ஹஜ் யாத்திரை செல்வது வழக்கம். இந்த புனித பயணத்திற்காக முஸ்லீம்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குவர். இந்த ஹஜ்மானியத்தை தமிழக முஸ்லீம் யாத்திரீகர்களுக்காக மாநில அரசு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
கடந்த 7-ம் தேதி தமிழக வஃக்பு வாரியம் சார்பில் சென்னையில் ரம்ஜான் நோன்பு இப்தார் விருந்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரிடம் வஃக்பு வாரியம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக சட்டபேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட முதல்வர், ஹஜ் பயணத்துக்கு ரூ. 6 கோடி மானியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் 2018-19 ஆம் ஆண்டில் 3,828 ஹஜ் பயணிகள் பயன் அடைவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.