19 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கொறடா ராஜேந்திரன் பரிந்துரை!

Last Updated : Aug 24, 2017, 04:33 PM IST
19 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கொறடா ராஜேந்திரன் பரிந்துரை! title=

தமிழக அரசுக்கு எதிராகவும், விரோதமாகவும் செயல்பட்டு வரும் 19 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கொறடா ராஜேந்திரன் மனு ஒன்றை சபாநாயகர் தனபாலிடம் அளித்துள்ளார்.

 

 

கடந்த 21-ம் தேதி இபிஎஸ் அணியும், ஓபிஎஸ் அணி ஒன்றாக இணைந்தன. மேலும் அன்று மாலை பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில் ஒ.பன்னீர்செல்வம் தமிழக துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து அதிமுக துணை பொதுச்செயலார் தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள், பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, தாங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையை இழந்து விட்டதாக கூறி கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை வழங்கினார்கள்.

மேலும் ஆத்திரமடைந்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வரை மாற்றுங்கள், ஏன் ஒ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி தரப்பட்டது எனவும், மேலும் முதல்வர் பழனிசாமியை மாற்றுங்கள், அவருக்கு பதிலாக சபாநாயகர் தனபாலுவை நியமிக்க வேண்டும் என கூறிவருகின்றனர். 

இந்நிலையில், கட்சி தலைமைக்கு எதிராக 19 எம்எல்ஏ-க்களும் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். தமிழக அரசின் தலைமை கொறடா என்ற முறையில் என்னிடம் தான் முதலில் தெரிவிக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யமால், நேரடியாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது கட்சிக்கு விரோதமானது. எனவே 19 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சபாநாயகர் தனபாலிடம் மனு கொடுத்துள்ளேன் என செய்தியாளர்களிடம் கூறினார்.

 

 

இச்சபவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending News