கள்ளக்குறிச்சி கலவரம்... உதயநிதி ஸ்டாலின் vs ரஜினிகாந்த் | சண்டை போட்டுக் கொள்ளும் ரசிகர்கள்

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் ரஜினிகாந்த் ரசிகர்களும், உதயநிதியின் ரசிகர்களும் ட்விட்டரில் மோதிக்கொண்டனர்.   

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 18, 2022, 04:54 PM IST
  • கள்ளக்குறிச்சியில் மாணவி ஒருவர் உயிரிழந்தார்
  • அவரது இறப்புக்கு நீதி கேட்ட போராட்டம் கலவரமாக மாறியது
  • வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது
கள்ளக்குறிச்சி கலவரம்... உதயநிதி ஸ்டாலின் vs ரஜினிகாந்த் | சண்டை போட்டுக் கொள்ளும் ரசிகர்கள் title=

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் படித்துவந்த மாணவி உயிரிழந்த விவகாரம் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. மாணவியின் தாய் பள்ளி நிர்வாகம் மீது சந்தேகப்பட, பள்ளி நிர்வாகமோ இதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மறுத்தது. சூழல் இப்படி இருக்க நேற்று மாணவியின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டு வாகனங்கள் தீ வைக்கப்பட்டன. இதனால் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே வழக்கு விசாரணையானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

நிலைமை இப்படி இருக்க, திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தாய்லாந்து வழியாக லண்டன் சென்றதாக தகவல் வெளியானது. தமிழ்நாடு பற்றி எரிந்துகொண்டிருக்க ‘சின்னவர்’ உதயநிதி ஸ்டாலின் எங்கே என்று பலர் கேள்வி எழுப்பி அவரை விமர்சித்துவந்தனர்.

Kallakurichi Violence

இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது. பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு,  வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதி. மாணவிகளுக்கு பாதுகாப்பான பள்ளிச்சூழலை அமைத்து தருவது அனைவரின் பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படுவோம்” என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி கலவரம் : தனியார் பள்ளி மாணவர்களை வேறு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

இந்நிலையில் ட்விட்டரில் #நான்தான்பாஉதவாக்கரைஉதய் மற்றும் #நான்தான்டாரஜினிகாந்த் ஆகிய ஹேஷ்டேக்குகளில் உதயநிதி ஸ்டாலினை ரஜினி ரசிகர்கள் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். இதனால் இந்த ஹேஷ் டேக்கானது ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது.

 

முன்னதாக, கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு குறித்து பேசிய ரஜினிகாந்த், போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டார்கள் என்று கூறியிருந்தார். 

மேலும் படிக்க | மீண்டும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை முயற்சி; காதல் விவகாரமா?

இதனையடுத்து ரஜினிகாந்த் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். உதயநிதி ஸ்டாலினும் அந்த சமயத்தில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த கார்ட்டூன் ஒன்றை பகிர்ந்து #நான்தான்பாரஜினிகாந்த் என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தியிருந்தார்.

Udhayanidhi Tweet

அதற்கு பதிலடி தரும் விதமாகவே ரஜினி ரசிகர்கள் தற்போது ட்விட்டர் களத்தில் உதயநிதிக்கு எதிராக குதித்திருக்கின்றனர் என சொல்கின்றனர் நெட்டிசன்கள்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News