இந்தி கற்பதன் மூலம் தமிழுக்கு எந்தவித குந்தகமும் வந்து விடாது: கிருஷ்ணசாமி

இன்றைய தலைமுறை இந்தி கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது. அதை ஏன் நிராகரிக்க வேண்டும் என டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 4, 2019, 03:38 PM IST
இந்தி கற்பதன் மூலம் தமிழுக்கு எந்தவித குந்தகமும் வந்து விடாது: கிருஷ்ணசாமி title=

சென்னை: கஸ்தூரிரங்கன் குழுவினர் பரிந்துரை செய்த புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தின்படி தமிழ்நாடு உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயப்படுத்தல் தொடர்பான பரிந்துறையை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு வந்த நிலையில், புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தில் சில திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

அதன்படி இந்தி பேசா மாநிலங்களில் மூன்றவாவது மொழியாக இந்தி கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் இந்தி கட்டாயம் என்ற பரிந்துரை நீக்கப்பட்டது.

இந்தநிலையில், இதுக்குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியதாவது, கஸ்தூரி ரங்கன் கல்வி கொள்கையில் பல்வேறு நல்ல அம்சங்கள் உள்ளது. இந்தியை திணிக்கப்படாமல் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து இந்தியை படிக்கும் சூழல் உருவாகி உள்ளது. இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

இந்தி மொழியை கற்றுக்கொள்ளுவதால் தமிழ் மொழிக்கு ஒன்றும் பாதிப்பாகுது. தமிழ் மொழி மிகவும் பழமையானது. அதை யாராலும் அழிக்க முடியாது. மறக்கவும் முடியாது. எனவே இன்றைய தலைமுறை இந்தி கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது. அதை ஏன் நிராகரிக்க வேண்டும். இந்தி மொழி கொள்கையை புதிய தமிழகம் கட்சி முழுவதுமாக வரவேற்பதாகவும், தமிழகத்தில் இந்தியை கற்பிக்க ஏதுவான சூழ்நிலையை அரசு ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

Trending News