மதுரை தோப்பூரில் AIIMS மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் வரும் ஜனவரி 27-ஆம் நாள் பிரதமர் மோடி AIIMS மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது!
மதுரை தோப்பூரில் ₹1,258 கோடி மதிப்பில் AIIMS மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்ததுள்ளது. அனைத்து வசதிகளுடன் பிரமாண்டமாக அமையும் இந்த மருத்துவமனையிடன் அடிக்கல் நாட்டு விழா வரும் ஜனவரி 27-ஆம் நாள் நடைப்பெறும் எனவும், இந்நிகழ்ச்சிக்காக பிரதமர் மோடி மதுரை வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மதுரை AIIMS-க்கு அடிக்கல் நாட்டும் அன்றைய தினமே அவர் தேஜஸ் சொகுசு ரெயில் மதுரை - சென்னை சேவையினை துவங்கி வைப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென் மாவட்ட பயணிகளிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அதிநவீன, முற்றிலும் குளிரூட்டப்பட்ட தேஜஸ் சொகுசு ரெயிலின் மதுரை - சென்னை சேவை இயக்கப்பட உள்ளதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே தரப்பில் தெரவிக்கையில்... தேஜஸ் ரெயில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 6 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் சென்றடையும். மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு சென்னை வந்து சேரும். வியாழக்கிழமையை தவிர பிற நாட்களில் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.