உலக முழுவதும் தமிழர்களின் பெருமையாக கீழடி விளங்குகிறது: ஸ்டாலின் பெருமிதம்

கீழடி அகழாய்வு மூலம் தமிழர்களின் பெருமையை வெளிக்கொண்டு வந்த அனைவருக்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்த மு.க.ஸ்டாலின்.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 27, 2019, 01:57 PM IST
உலக முழுவதும் தமிழர்களின் பெருமையாக கீழடி விளங்குகிறது: ஸ்டாலின் பெருமிதம் title=

கீழடி: 2600 ஆண்டுகளுக்கும் முற்பட்ட தமிழர் நாகரிகத்தை உலகுக்கு உணர்த்திய கீழடி நிலத்தை திமுக தலைவர் நேரில் பார்வையிட்டார். தமிழர்களின் பெருமையை வெளிக்கொண்டு வந்த அனைவருக்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். மேலும் கீழடி பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். 

மதுரை பக்கத்தில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வு ஆராய்ச்சி மூலம் 2600 ஆண்டுகளுக்கும் முற்பட்ட தமிழர் வரலாறு குறித்த பல்வேறு ஆவணங்கள் கிடைத்துள்ளன. மேலும் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால், இன்னும் தமிழர்களின் நாகரிகம் குறித்து பல உண்மைகள் வெளிவரும் எனத்தெரிகிறது. 

மத்திய தொல்லியல் துறை மூலம் கீழடியில் முதலில் அகழாய்வுப் பணிகள் மேற்க்கொள்ளப்பட்டது. முதல் மூன்று அகழாய்வு ஆராய்ச்சிகளை தொடர்ந்து செய்தது. அதன்பின்னர் திடிரென தனது அகழாய்வு ஆராய்ச்சி பணியை மத்திய தொல்லியல் துறை நிறுத்திக்கொண்டது. அதுமட்டுமில்லாமல் முதல் மூன்று கட்ட அகழாய்வு குறித்து எந்தவிதமான அறிக்கைகளை வெளியிடவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அரசுக்கு எதிராக பல இயக்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்தது. இதனையடுத்து தமிழக தொல்லியல் துறையினர் சார்பில் நான்காம் கட்ட அகழாய்வு ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நான்காம் கட்ட அகழாய்வில் தான் தமிழர் வரலாறு குறித்த பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளது. இந்த சான்றுகளை வைத்து பார்க்கும் போது கிமு 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கும் என்றும், அப்போழுதே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தார்கள் என்றும் தொல்லியில் துறை முடிவு செய்துள்ளது. 

இதனைதொடர்ந்து கடந்த ஜூன் 13 ஆம் தேதி முதல் ஐந்தாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இந்த அகழாய்வு செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. அதற்கு அடுத்து ஆறாம் கட்ட அகழாய்வு தொடங்குவதற்க்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் அகழாய்வு மேற்கொள்ளப்படும். 

இந்தநிலையில், இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் அமைச்சர்கள் தமிழர்களின் பெருமையாக விளங்கும் கீழடி பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வுகளை நேரில் பார்வையிட்டார். அதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "2600 ஆண்டுகளுக்கும் முற்பட்ட தமிழர் நாகரிகத்தை உலகுக்கு உணர்த்திய கீழடி நிலத்தை பார்வையிட்ட போது" என காணொளியை பகிர்ந்துள்ளார்.

 

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் பேசியதையும் தனது ட்விட்டர் பக்கத்தி பகிர்ந்துள்ளார்.

 

Trending News