உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்வில் தை பொங்கல் திருநாளில் நலமும் வளமும் பெருக வேண்டும் என தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உழைக்கும் மக்களால் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு கொண்டாட்ட நிகழ்ச்சி பொங்கல் எனப்படுகிறது. தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படும் இந்த விழா, தமிழர்களால் கொண்டாடப்படும் தனிப்பெரும் விழா ஆகும்.
தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் தமிழர் திருநாளாக இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இத்திருநாளின் வாழ்த்துக்களை இந்திய தலைவர்கள் பகிர்ந்துள்ளனர்.
அந்த வகையில் தமிழப முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் பொங்கள் திருநாள் வாழ்த்து செய்தி...
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் "பொங்கல் திருநாள்" வாழ்த்துச் செய்தி.. #HappyPongal pic.twitter.com/wGL3qTbSF8
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) January 14, 2019
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பொங்கள் திருநாள் வாழ்த்து செய்தி...
Best wishes on Pongal! pic.twitter.com/tZlvGLXgOZ
— Narendra Modi (@narendramodi) January 14, 2019
குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்களின் பொங்கள் திருநாள் வாழ்த்து செய்தி...
தமிழகம் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழ் சகோதர சகோதரிகளுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். நமது மக்கள் குறிப்பாக உழவர்களின் கடுமையான உழைப்பு மற்றும் விடாமுயற்சியை கொண்டாடும் நல்ல தருணம் பொங்கல் விழா. இனியநாளில் வளமான செழிப்பும் நலமான வாழ்வும் அனைவரும் பெற்றிட வாழ்த்துகின்றேன்
— President of India (@rashtrapatibhvn) January 15, 2019