சென்னை: 3 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் 19-நம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இன்று காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இன்று முக்கிய அரசியல் கட்சியினர் மனு தாக்கல் செய்யவில்லை.
தமிழக சட்டமன்ற தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகாரால் ஒத்திவைக்கப்பட்ட தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் தொகுதிக்கான வேட்பு மனுக்களை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் (பொறுப்பு) இன்னாசி முத்து பெற்றுக்கொண்டார். திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர் தலுக்கான மனுத்தாக்கல் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் நடக்கிறது.
மதியம் 3 மணி வரை மனுதாக்கல் நடைபெறும். இதை யட்டி கோட்டாட் சியர் அலுவலகம் முன் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வேட்பாளருடன் 4 பேர் மட்டும் சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நவம்பர் 3-ம் தேதி நடைபெறும். மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் 5-ம் தேதி. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும். மற்றும் 19-ந் தேதி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு 22-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது.