பா.ம.க சார்பில் புதுவையில் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்...

மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்க புதுவையில் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடத்துகிறது பாமக!

Last Updated : Feb 20, 2019, 12:10 PM IST
பா.ம.க சார்பில் புதுவையில் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்... title=

மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்க புதுவையில் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடத்துகிறது பாமக!

இம்மாதம் 23-ஆம் தேதி சனிக்கிழமை புதுச்சேரியில் நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டம் ஆனது அன்று காலை  சரியாக 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை புதுச்சேரி டோல்கேட் அருகில் உள்ள சங்கமித்ரா திருமண அரங்கில் நடைபெறும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசு, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் இச்செயற்குழு- பொதுக்குழு கூட்டங்களுக்கு கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன்  பொருளாளர் திலகபாமா ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் எனவும், செயற்குழுக் கூட்டத்தில் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள், மாநிலத் துணைத் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள், மாவட்ட செயலர்கள், பொருளாளர்கள், அணிகளின் மாநிலச் செயலர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்டும் நிலையில், எதிர்வரும் தேர்தலுக்கான தேர்தல் கூட்டணி குறித்து தமிழகத்தில் நேற்று முதல் வேகமெடுக்கத் துவங்கியுள்ளது.

அந்தவகையில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்குவதற்கான கூட்டணி உடன்பாடு நேற்று கையெழுத்தானது. இந்நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பா.ம.க தொண்டர்களை வரும் தேர்தலுக்கு ஆயுத்தப்படுத்த பணியில் கட்சியின் தலைமை அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Trending News