பாமக ராமதாஸ் - முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமி திடீர் சந்திப்பு...

புதுவை மாநில முன்னாள் முதல்வரும், என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான என்.ரங்கசாமி இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தார்.!

Last Updated : Feb 27, 2019, 02:54 PM IST
பாமக ராமதாஸ் - முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமி திடீர் சந்திப்பு... title=

புதுவை மாநில முன்னாள் முதல்வரும், என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான என்.ரங்கசாமி இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தார்.!

புதுவை யூனியன் பிரதேசத்தின் ஒரே ஒரு மக்களவைத் தொகுதியில் தமிழகம் ஆளும் அதிமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்.ரங்கசாமி, பொதுதேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் தங்களது கூட்டணி சகாவான பாமக கட்சி நிறுவனரை சந்தித்துள்ளார்.

முன்னதாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த புதன்கிழமை அன்று அறிவித்தார். 

புதுவை எப்போதுமே காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வருவதாலும், இப்போது ஆளும் கட்சியாக இருப்பதாலும் பேச்சுவார்த்தையில் எவ்வித இழுபறியும் இன்றி, திமுக கூட்டணியில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது.

அதிமுக கூட்டணியில் அத்தொகுதி புதுவையில் வலுவான எதிர்க்கட்சியாக விளங்கும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்-இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கடந்த வியாழக்கிழமை அறிவித்தனர். 
இதையடுத்து தற்போது புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ்-என்.ஆர்.காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி உருவாகியுள்ளது.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களை திண்டிவனத்தையடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் புதுவை மாநில முன்னாள் முதல்வரும், என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான என்.ரங்கசாமி இன்று சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றது என கூறப்படுகிறது. எனினும் எதிர்வரும் தேர்தல் திட்டம் குறித்து விவாதிக்க இச்சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Trending News