மாமல்லபுரத்தில் இந்திய - சீன உச்சி மாநாட்டிற்கான ஏற்பாட்டை சிறப்பாக செய்ததற்காக முதலமைச்சர் பழனிசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்..!
சென்னை: மாமல்லபுரத்தில் இந்தியா-சீனா உச்சி மாநாட்டிற்கான ஏற்பாட்டை செய்தமைக்காக தமிழக முதல்வருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில், சீன அதிபரின் வருகையின்போது செய்யப்பட்ட வரவேற்பு ஏற்பாடுகள், அன்பான உபசரிப்புகள் மறக்க முடியாத நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், உச்சிமாநாட்டுக்கு சிறப்பான ஏற்பாடு செய்தமைக்கு தமிழக மக்களுக்கும், அரசியல் அமைப்புகளுக்கும் பாராட்டுகள் என்று மோடி கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடியும் சீன அதிபரும் கடந்த 11 ஆம் தேதி சென்னை வந்தனர். அந்த சந்திப்பின் போது இந்தியா - சீனா இடையிலான பல்வேறு ஒப்பந்தங்கள் கஎளுத்தாகினர். இந்நிலையில், மாமல்லபுரத்தில் இந்திய - சீன உச்சி மாநாட்டிற்கான ஏற்பாட்டை சிறப்பாக செய்ததற்காக முதலமைச்சர் பழனிசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுயர்த்து பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதத்தில், ‘மாமல்லபுரம் வந்தது எனக்கும், சீன அதிபருக்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருந்தது. சீன அதிபர் வருகையின்போது அளித்த வரவேற்பு, அன்பான உபசரிப்பு நமது கலாசாரம், மரபை ஒருசேர பிரதிபலித்தது. மாநாட்டிற்கு சிறப்பான ஏற்பாடு செய்த தமிழக மக்கள், கலாசார, சமூக, அரசியல் அமைப்பு, தமிழக அரசுக்கும், முதலமைச்சர் பழனிசாமிக்கும் பாராட்டுகள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.