இராசிபுரம்: ராசிபுரம் அருகே காரில் வந்த நித்தியானந்தா சீடர்களை அடித்து விரட்டிய பொதுமக்கள்; உயிர் பயத்தில் தப்பிய சீடர்கள். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஐய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி, 62. இவர் அதே பகுதியில் உள்ள வீட்டின் ஒரு பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார்.
இவரின் மனைவி அத்தாயி, 52. வீடு மற்றும் கடை அத்தாயின் பெயரில் உள்ளது. இதன் மீது ரூ.6.40 லட்சத்திற்கு வங்கியில் கடன் வங்கியுள்ளனர். அத்தாயி நித்யானந்தாவின் மீது அளவு கடந்த பத்தியின் காரணமாக ரூ.6.40 லட்சம் பணத்துடன் கடந்த 2017ல் பெங்களூரில் உள்ள ஆசிரமத்திற்கு சென்றுவிட்டார். அதன்பின் அத்தாயி வீடு வரவே இல்லை.
இந்த நிலையில், வங்கியில் வாங்கிய கடனுக்கான வாய்தா முடிந்த நிலையில் வீடு ஜப்திக்கு வந்துள்ளது. ராமசாமி கடனுக்கான பணத்தை தயார் செய்து விட்டார். ஆனால், அத்தாயின் கையெழுத்து அவசியம் என்பதால் நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு பல முறை பேசிய பிறகே இன்று அத்தாயியை அழைத்து வர சம்மதம் தெரிவித்துள்ளனர்.
ALSO READ | விநாயகர் சதுர்த்தி விழா மீதான தடை சரியல்ல: மதுரை ஆதீனம்
அதன்படி, இன்று அத்தாயியை 3 பேர் காரில் வீட்டிற்கு அழைத்து வந்தனர். இந்த நிலையில், காரை சூழ்ந்து கொண்ட அத்தாயின் கணவர் ராமசாமி, மகன் மற்றும் பொதுமக்கள் அத்தாயியை வேறு காரில் பத்திரமாக அனுப்பிவைத்தனர்.
இதனை தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காரில் வந்த நித்தியின் சீடர்களை பொதுமக்கள் விரட்ட உயிர் பயத்தில் அங்கிருந்து கிளம்பினர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சினிமா பாணியில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பட்டணம், வடுகம், புதுப்பட்டி என பல பகுதியில் இருந்து பெண்கள் பலரும் நித்தியின் ஆசிரமத்தில் உள்ளனர். அவர்களை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
Also Read | மதுரை ஆதீன மடத்தின் பீடாதிபதியாக தன்னை அறிவித்துள்ள நித்யானந்தா..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR