கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பெரியகாட்டுபாளையம் ஊரைச்சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கும், பண்ருட்டியை சேர்ந்த ஜெயசந்தியா என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அதன்பேரில் 20/01/2022 அன்று காடாம்புலியூரில் உள்ள திருமண மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. பெண் வீட்டார்கள் அந்த திருமண நிகழ்வில் பெண் அழைப்பு முடிந்ததும் டிஜே நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
ALSO READ | ரவுடிக்கு உதவிய காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி
அதன்படி பெண் அழைப்பு முடிந்ததும், திருமண மண்டபத்தில் அனைவரும் டிஜே பாடலுக்கு நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது மணமகள் வீட்டார்கள், மணமகன் மற்றும் மணப்பெண்ணை நடனமாட வற்புறுத்தினர். அப்போது மணமகள் அவரது ஆண் உறவினர்களுடன் சினிமா பாடலுக்கு வெகு நேரமாக ஆடியதால் ஆத்திரமடைந்த மணமகன் அனைவரது முன்னிலையிலும் மணமகளை கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து மணமகள் எனக்கு இந்த திருமணம் வேண்டாம் என கூறிவிட்டு மண்டபத்தை விட்டு வெளியேறிவிட்டார்.
பின்னர் அன்றைய தினமே அந்த பெண்ணுக்கும், அவரது முறைமாமனுக்கும் பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயிலில் வைத்து பெண் வீட்டார்கள் திருமணம் செய்து முடித்தனர். இந்த தகவலையறிந்த மணமகன் ஸ்ரீதர் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தன்னை திருமணம் (Marriage) செய்து கொள்வதாக கூறி நிச்சயம் செய்து திருமண மண்டபத்தில் டிஜே நிகழ்ச்சியில் திருமணத்திற்கு வந்த உறவினர்கள் ஆடிக்கொண்டிருந்தார்கள், அப்பொழுது என்னையும் ஜெய்சந்தியாவையும் நடனம் ஆடச் சொல்லி பெண் வீட்டு உறவினர்கள் கட்டாயப்படுத்தி ஆட வைத்தனர்.
மேலும் பெண் வீட்டு உறவினர் மணப்பெண்ணின் கழுத்தில் கையை வைத்துக் கொண்டு நடனமாடியது எனக்கு மிகவும் வருத்தம் அளித்தது. ஏன் இது போல் நடந்து கொள்கிறாய்? என்று கேட்டதற்கு அவரது குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்திவிட்டதுடன் மணப்பெண்ணுக்கு விருப்பமில்லாமல் அன்றே வேறு ஒரு ஆணுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் நானும் எனது குடும்பமும் உறவினர்களும் மனவேதனை அடைந்திருக்கிறோம். திருமணம் நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை எங்களுக்கு ரூ.7 லட்சம் செலவாகி உள்ளதோடு, எனது வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. ஆகையால் மணமகள் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ALSO READ | பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சுற்றிவளைப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR