CAA-வுக்கு எதிரான பெண்கள் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்ற ப.சிதம்பரம்

10 நாட்களாக தொடர்ந்து CAA மற்றும் NPR க்கு எதிராக பெண்கள் நடத்தி வரும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப..சிதம்பரம் கலந்துக் கொண்டார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 18, 2020, 04:09 AM IST
  • கொல்கத்தாவில் உள்ள பார்க் சர்க்கஸ் மைதானத்தில் CAA க்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
  • பெண்கள் போராட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் மூத்த தலைவர் ப..சிதம்பரம் நேற்று சென்றார்.
  • முன்னதாக, டெல்லி ஷாஹீன் பாக் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் பங்கேற்றார்.
CAA-வுக்கு எதிரான பெண்கள் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்ற ப.சிதம்பரம் title=

புது டெல்லி: டெல்லியின் ஷாஹீன் பாக்கை தொடர்ந்து கொல்கத்தாவின் பார்க் சர்க்கஸில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் என்.ஆர்.சி.க்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த போராட்டத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப..சிதம்பரமும் கலந்துக் கொண்டார். நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகுதியில், ப.சிதம்பரம் பெண்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்க பார்க் சர்க்கஸுக்கு வந்தார். இந்த நேரத்தில் காங்கிரஸ் தலைவர் போராட்டக்காரர்களை சந்தித்து போராட்டத்தில் ஒன்றாக இருப்பதை உறுதி செய்தார்கள்.

ப.சிதம்பரம் பங்கேற்றார்:
உங்களுக்கு சொல்கிறோம்.... ஜனவரி 7 முதல் கொல்கத்தாவில் உள்ள பார்க் சர்க்கஸ் மைதானத்தில் CAA மற்றும் NPR க்கு எதிராக ஏராளமான பெண்கள் தர்ணாவில் அமர்ந்திருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டங்களில் முஸ்லிம் சமூகத்தைத் தவிர, பிற சமூகங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்களைத் தவிர, ஏராளமான குழந்தைகள் மற்றும் மாணவர்களும் காணப்பட்டுள்ளனர். இந்த எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் பார்க் சர்க்கஸ் மைதானத்தை அடைந்தார்.

ஷாஹீன் பாக் நகரில் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது:
அதே நேரத்தில், டெல்லியின் ஷாஹீன் பாக் நகரில், குடியுரிமைச் சட்டத்திற்கும் என்.ஆர்.சிக்கும் எதிராக பெண்கள் ஒரு மாதமாக தர்ணாவில் அமர்ந்திருக்கிறார்கள். மத்திய அரசு கொண்டு வந்துள்ள CAA ஐ திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையில் பெண்கள் பிடிவாதமாக உள்ளனர். முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் பெண்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக ஷாஹீன் பாக் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News