நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தொடர்ந்து வலியுறுத்தல்!

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Last Updated : May 10, 2019, 12:53 PM IST
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தொடர்ந்து வலியுறுத்தல்! title=

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரே இறுதி முடிவு எடுப்பார் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதன்படி, ஆளுநர் விரைவில் முடிவு எடுப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதற்காக ஆளுநருக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும்.

அதே போன்று நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க, மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்" என்று கூறினார். 

மருத்துவ நுழைவுத் தேர்வான 'நீட்' தேர்வில் தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

Trending News