"ஆப்ரேஷன் காவேரி" மூலம் சூடான் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் 4 பேர் வருகை

ஆப்ரேஷன் காவேரி மூலம் முதற்கட்டமாக சூடான் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் 4 பேர் வருகை மதுரை வந்தடைந்தனர்.    

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 27, 2023, 11:56 AM IST
"ஆப்ரேஷன் காவேரி" மூலம் சூடான் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் 4 பேர் வருகை title=

சூடான் நாட்டில் உள்நாட்டுப் போர் காரணமாக நிலவிய சிக்கலான சூழலில் அங்கிருந்து இந்தியர்கள் அனைவரையும் மீட்கும் பொருட்டு 'ஆபரேஷன் காவேரி' எனும் பெயரில், இந்திய அரசு மீட்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக வெளியுறவு துறை அமைச்சகம் மூலம் 360 இந்தியர்கள் மீட்டுப்பட்டு ஜெட்டாவில் இருந்து புதுடெல்லிக்கு விமான மூலம் அழைத்து வரப்பட்டனர். இதில் ஒன்பது தமிழர்கள் புதுடெல்லியில் இருந்து சென்னை மற்றும் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க | டெல்லியில் சங்கமம்: மல்கோவா மாம்பழத்துடன் இபிஎஸ்... காலையில் சென்ற ஆளுநர்... ஸ்டாலின் நாளை பயணம்!

இதில் ஜோன்ஸ் திரவியம் என்பவரும், அவரது மனைவி ஷீபா மற்றும் அவரது மகள்கள் ஜென்சி ஜேசன், ஜோஸ்ன ஜோன்ஸ் ஆகியோர்  மதுரைக்கு வந்த நான்கு தமிழர்கள் தமிழக அரசு சார்பில் அவர்களின் சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்ட மேட்டுப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சூடான நாட்டில் சிக்கி உள்ள தமிழர்களின் குடும்பத்தார் தகவல் பரிமாற்றிக் கொள்ள தமிழக அரசை தொடர்பு கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டு உள்ளது. 

9600023645,9289516711 போன்ற எங்களைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த ஜோன்ஸ் திரவியம் 2001 ஆம் ஆண்டு ஷீபா என்ற பெண்ணை மணந்துள்ளார். இந்த தம்பதிக்கு ஜென்சி ஜோன்ஸ் மற்றும் ஜோஷ்னா ஜோன்ஸ் என இரண்டு மகள்கள் உள்ளனர். 15 ஆண்டுகளுக்கு முன் தனது குடும்பத்துடன் சூடான் நாட்டில் ஆசிரியர் பணிக்காக சென்று பணியாற்றி வந்தார். தொடர்ந்து, அங்கு பள்ளி ஒன்றை ஆரம்பித்து நடந்தி வந்த நிலையில், தற்போது அவரது உடமைகள் சூடானிலேயே விட்டுவிட்டு வந்திருப்பதாக வேதனை உடன் தெரிவித்தார். தங்களின் குழந்தைகளின் கல்வி தொடர்வதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு இந்திய அரசு மற்றும் தமிழக அரசு உதவி செய்ய முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மேலும் படிக்க | முதலமைச்சரை ஏமாற்றிய மாற்றுத்திறனாளி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News