ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தமிழகம் முழுவதும் அதிக தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால் பலரும் தங்கள் குடும்பங்களை இழந்து நின்றனர். இதனை தடை செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சி ஆதரவுடன் ஆன்லைன் ரம்மி தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டு, அதன் படி இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், 130 நாட்களுக்குப் பிறகு மீண்டும் அந்த மசோதாவில் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பினார்.
மேலும் படிக்க | Online Rummy: ஆன்லைன் ரம்மி தடை மசோதா கடந்து வந்த பாதை
மேலும், ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை நிறைவேற்ற மாநில சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து உடனடியாக தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டு அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவும் மீண்டும் கிடப்பில் போடப்பட, தமிழக சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடுவது சட்டவிரோதம் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இனி தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடினால்:
ஆன்லைன் ரம்மி போகர் உள்ளிட அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளும் தடை விதிக்கப்படுகிறது. இந்த விளையாட்டில் ஈடுபட்டால் மூன்று மாதம் சிறை அல்லது ஐந்தாயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். சூதாட்டத்தை விளம்பரம் செய்பவர்களுக்கு ஓராண்டு சிறை அல்லது ஐந்து லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். சூதாட்ட விளையாட்டை வழங்குவோருக்கு 3 ஆண்டு சிறை அல்லது 10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். அதே நிறுவனம் மீண்டும் தவறிழைத்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 20 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க | Online Rummy Ban Bill: ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ