Engg., தொடர்ந்து Agri.,-க்கும் ஆன்லைனில் கலந்தாய்வு!

இளநிலை வேளாண்மை படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் வரும் மே 18 முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது!

Last Updated : May 14, 2018, 01:43 PM IST
Engg., தொடர்ந்து Agri.,-க்கும் ஆன்லைனில் கலந்தாய்வு! title=

கோவை: இளநிலை வேளாண்மை படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் வரும் மே 18 முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் 14 முதன்மை கல்லூரிகள் மற்றும் 26 இணை சார்பு தனியார் கல்லூரிகள் வேளாண் கல்விலை வழங்கி வருகிறது.

இந்த கல்லூரிகளில் பயில்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரும் மே 18 முதல் துவங்கும் என வேளாண் பல்கலை துணை வேந்தர் K ராமசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், வரும் ஜூன் 17 வரை விண்ணப்பங்கள் ஏற்கப்படும் எனவும், ஜூன் 18 முதல் ஜூன் 20 வரை சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைப்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வரும் ஜூன் 22 அன்று மாணவர்களுக்கான தர எண் வழங்கப்படும். பின்னர் ஜூலை 7-ஆம் நாள் சிறப்பு நேர்முக தேர்வு நடைப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்டங்களாக நடைப்பெறும் இந்த கலந்தாய்வானது ஜூலை 9 - ஜூலை 13 மற்றும் ஜூலை 23 - ஜூலை 27 ஆகிய காலக்கட்டங்களில் ஆன்லைன் மூலம் நடைப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளாக விண்ணப்ப படிவங்களை ஆப்லைன் முறையில் பெற்ற வேளாண் பல்கலை இந்தாண்டு முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பெறுவது குறிப்பிடத்தக்கது. வெகு தொலைவில் இருக்கும் மாணவர்கள் கோவை வந்து கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டிய சிரமத்தினை இந்த முறை குறைக்கும் என பல்கலை துணை வேந்தர் K ராமசாமி தெரிவித்துள்ளார்.

Trending News