குறைந்த சம்பளத்துக்கு ஆசைப்பட்ட முதலாளி! கைவரிசை காட்டிய வட மாநில இளைஞர்!

நாட்றம்பள்ளி அருகே தண்ணீர் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்த வடமாநில இளைஞர் 15 நாளில் பிக்கப்வேன் மற்றும் 2 லட்ச ரூபாயை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 15, 2022, 08:00 PM IST
  • வேலை தேடி வந்த வட மாநிலத்தவர்கள்.
  • ஆதார் கார்டு தராமல் நிலுவையில் வைத்து பணி புரிந்த இளைஞர்கள்.
  • 15 நாட்களில் திருட்டில் ஈடுபட்டனர்.
குறைந்த சம்பளத்துக்கு ஆசைப்பட்ட முதலாளி! கைவரிசை காட்டிய வட மாநில இளைஞர்! title=

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அம்மனாங்கோவில் பகுதியில் சுமார் 15 வருடங்களாக கோபி என்பவர் ஏ.ஆர்.ஜி என்டர்பிரைசஸ் என்ற பெயரில் நிச் மற்றும் டெல்டா என்கிற பெயர்களில் ஆர்.ஓ குடிநீர் விநியோகம் செய்யும் நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்நிலையில் கம்பெனியில் வேலை செய்வதற்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டதால் வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்துள்ளார்.

இதனை அறிந்த வட மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சு மற்றும் நிர்மல் எனும் 2  வாலிபர்கள் கடந்த மாதம் 27ஆம் தேதி தங்களுக்கு வேலை வேண்டும் என்று கூறி கோபிக்கு போன் செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கோபியும் அவர்களை அழைத்து அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் புகைப்படங்களை தரவேண்டும் என்கிற நிபந்தனையுடன்  வேலைக்கு அமர்த்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி தண்ணீர் கம்பெனியிலேயே அவர்கள் தங்க வசதி ஏற்படுத்தி உள்ளார் கோபி . ஆனால் இதுவரை அடையாள அட்டை ஆதாரங்களையும் புகைப்படங்களையும் கொடுக்காமல்  இழுத்தடித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை தண்ணீர் கம்பெனியில் இருந்த பிக்கப் வாகனம் மற்றும் இதர வாகனங்களில் இருந்த டீசல், 50 லிட்டர் ரொக்கப் பணம் சுமார் 2 லட்சம் ரூபாய், 50ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்டீல் சாமான்கள் ஒரு சிலிண்டர், எல்இடி டிவி என அனைத்து பொருட்களையும்  திருடிக் சென்றுள்ளனர்.

வழக்கம் போல காலை வேலைக்கு வந்த ஊழியர்கள் கம்பெனியின் சாவி வெளியே வீசப்பட்டு இருந்ததை அறிந்து மேலாளர் கோபிக்கு தெரிவித்துள்ளனர்.

உடனடியாக கம்பெனிக்கு வந்த கோபி திருடு போன சம்பவம் அறிந்து அதிர்ச்சி அடைந்து நாட்றம்பள்ளி காவல்துறைக்கு தகவல் தெரிவித்து புகார் கொடுத்ததின் அடிப்படையில் நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலை தேடி வந்த வடமாநில இளைஞர்கள் வாகனம் உட்பட சுமார் 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் வடமாநில இளைஞர்களை வேலைக்கு அமர்த்தி என்னைப் போல யாரும் ஏமாற வேண்டாம் எனவும் கோபி மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

தமிழகத்திற்கு பிழைக்க வருபவர்கள் பல லட்சம் பேர். அவர்களில் பீகார், ஒரிசா போன்ற மாநிலங்களில் இருந்து அதிகப்படியான இளைஞர்கள் மாதம் 4 ஆயிரம், 6 ஆயிரம் என்ற அதிகப்பட்ச சம்பளத்துக்கே இங்கு பணியமர்த்தப்படுகின்றனர். 

தமிழக இளைஞர்கள் அதிக சம்பளம் எதிர்பார்ப்பார்கள் என்ற எண்ணத்தோடு பல முதலாளிகள் இந்த வடமாநில இளைஞர்களுக்கே வாய்ப்பு கொடுக்கின்றனர்.

இதனால் பல முறை நன்மை நிகழ்ந்தாலும், சில முறை இவ்வாறான அசம்பாவிதங்கள் நிகழத்தான் செய்கிறது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க | அன்றே கணித்த உதயநிதி- சிவகார்த்திகேயனின் ‘டான்’ வசூல் எவ்வளவு?!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News