தமிழக அரசு சார்பில் மறைந்த முன்னால் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று மாலை அரியலூரில் நடைபெறும் விழாவில் தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமியும், தமிழக துணை-முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றனர்.
இந்த விழா அரியலூரில் அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் எம்ஜிஆர் படத்தை பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் திறந்து வைத்தனர். இந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பல தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
அப்பொழுது துணை-முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பேசுகையில், தமிழகத்தில் அதிமுக அரசை கவிழ்க்க எந்த சக்தியாளும் முடியாது. உயிரை கொடுத்தாவது மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியை காப்பாற்றுவோம். எந்த கொம்பாதி கொம்பனாலும் அசைக்க முடியாத ஆட்சியை ஏற்படுத்தியவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் என அவர் கூறினார்.
உயிரை கொடுத்தாவது மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியை காப்பாற்றுவோம்.
— O Panneerselvam (@OfficeOfOPS) August 23, 2017
எந்த கொம்பாதி கொம்பனாலும் அசைக்க முடியாத ஆட்சியை ஏற்படுத்தியவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.
— O Panneerselvam (@OfficeOfOPS) August 23, 2017
No one has the power to topple this government: Tamil Nadu Dy CM O.Panneerselvam at MGR's birth centenary celebrations in Ariyalur. pic.twitter.com/xm766megW6
— ANI (@ANI) August 23, 2017
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்க உள்ளனர்.