500, 1000 ரூபாய் நோட்டுகள் தடை என்ற அறிவிப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு

பிரதமர் மோடி 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ளார். கருப்பு பணத்துக்கு எதிராகவும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும் புதிய உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டிள்ளது என்று மோடி கூறியிருந்தார்.

Last Updated : Nov 9, 2016, 11:29 AM IST
500, 1000 ரூபாய் நோட்டுகள் தடை என்ற அறிவிப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு title=

சென்னை: பிரதமர் மோடி 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ளார். கருப்பு பணத்துக்கு எதிராகவும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும் புதிய உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டிள்ளது என்று மோடி கூறியிருந்தார்.
அதன்படி, 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் நேற்று நள்ளிரவிலிருந்து செல்லாது. நவம்பர் 9-ம் தேதி முதல், இந்த நோட்டுகள் வெறும் காகிதங்களாகவே கருதப்படும் என்று தெரிவித்தார்.இதற்கு பதிலாக புதிய 500 ரூபாய், 2,000 ரூபாய் தாள்கள் வெளியாகும் என்றும் தெரிவித்தார். 

இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து ஸ்டாலின் கூறுகையில், " மத்திய அரசின் அவசரமான இந்த அறிவிப்பால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர், மக்களுக்கு கால அவகாசம் கொடுத்திருக்க வேண்டும். மத்திய அரசு நேற்று ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள் ஆகியவற்றில் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லும் என அறிவித்தது. ஆனால் தற்போது ரூ500, ரூ1,000 நோட்டுகளை பெட்ரோல் பங்குகள், ரயில் நிலையங்கள் வாங்குவதில்லை. மேலும் மக்கள் கணக்கில்  15 லட்சத்தை எப்போது டெபாசிட் செய்வார் ஸ்டாலின் கூறினார்.

Trending News