கோடநாடு விவகாரத்தில் எந்த பதிலையும் தராத முதல்வர், வழக்கு மட்டுமே நடப்பதாக கூறுகிறார் என திமுக தலைவர் ஸ்டாலின் கட்டம்....
கொடநாடு கொள்ளை - கொலை சம்பவம் குறித்து தெஹல்ஹா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியரான மேத்யூஸ் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொடநாடு எஸ்டேட்டில் இருந்து பணம், நகைகள் மற்றும் சில முக்கியமான ஆவணங்களை கொண்டு வந்து கொடுக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜிடம் கூறியதாக குற்றவாளி சயன் கூறுகிறார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் இறந்தது திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை என்றும், கொடநாடு சம்பவத்திலும், ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னணியிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், சசிகலாவும் உள்ளனர் என்று, அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. மேத்யூஸ் ஆவணப்பட வீடியோ நாடு முழுவதும் பெரும் புயலைக்கிளப்பி உள்ளது. மேலும் இச்சம்பவம் பெரும் விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது. எதிர்கட்சி உட்பட தமிழகத்தின் மற்ற கட்சிகள், இச்சம்பவம் குறித்து விசாரணைகூறிவருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் தற்போது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “கோடநாடு பங்களாவில் கொள்ளை மற்றும் தொடர்ச்சியாக நடந்த மரணங்களின் பின்னணி என்ன? கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நீதி விசாரணை நடத்தப்படும் என முதல்வரால் கூற முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இது குறித்து அவர் கூறுகையில், கோடநாடு விவகாரத்தில் சிறப்பு விசாரணை ஆணையத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக ஆளுநர் மற்றும் நாட்டின் குடியரசுத் தலைவரிடம் முறையிடுவோம். ஆளுநரும் குடியரசுத் தலைவரும் கோடநாடு விவகாரத்தில் தலையிட்டு விசாரிக்க வேண்டும். கோடநாடு விவகாரத்தில் முறையான விசாரணை இல்லையெனில் வழக்கும் தொடர்வோம். இந்த விவகாரத்தில் சரியான எந்தப் பதிலையும் தராத முதல்வர் வழக்குப் பதிந்துள்ளாக மட்டும் கூறுகிறார். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும்.
அதுவும், விசாரணை சென்னை உயர்நீதிமன்றம் தலைமையில் நடைபெற வேண்டும். விசாரணை வலையத்தில் இன்றைய முதல்வர் மட்டுமல்லாது தமிழக அமைச்சகர்கள், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தார் ஆகியோரையும் இணைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.