புரிதல் இல்லாதவர் ஆளுநர்... திராவிட மாடல் சர்ச்சைக்கு அமைச்சர் நறுக் பதிலடி!

Dravidian Model Controversy: உயர்கல்வியில் பெண்களுடைய பங்களிப்பில் இந்தியாவின் சராசரியை விட தமிழ்நாட்டின் சராசரி அதிகமாக இருப்பதாகவும், இதுதான் திராவிட மாடலின் வெற்றி என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். 

Written by - Sudharsan G | Last Updated : May 4, 2023, 05:21 PM IST
  • திராவிட மாடல் பெரிய மாந்திரீக வார்த்தை ஒன்றும் இல்லை - அமைச்சர் மனோ தங்கராஜ்.
  • அரசியல் பேச்சுகளை எல்லாம் கவர்னர்கள் பேசக்கூடாது - அமைச்சர் மனோ தங்கராஜ்.
  • ஆளுநர் எதை சொன்னாலும் அவர் மறுக்க தான் செய்வார் - அமைச்சர் மனோ தங்கராஜ்.
புரிதல் இல்லாதவர் ஆளுநர்... திராவிட மாடல் சர்ச்சைக்கு அமைச்சர் நறுக் பதிலடி! title=

Dravidian Model Controversy:​ ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் இளைய தலைமுறையினரிடையே புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவில் முதல்முறையாக 'G20 Startup20X'நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை, தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி நிறுவனர் திரு.பி ஸ்ரீராம், கல்லூரி முதல்வர் ரமேஷ், பேராசிரியர்கள், மாணவர்கள், மற்றும் பல்வேறு தொழ்ல்துறையைச்சேர்ந்த தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

எது திராவிட மாடல்?

அப்பொழுது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ்,"திராவிட மாடலை எக்ஸ்பயர் பண்ண வேண்டும் என்பது அவருடைய (ஆளுநர்) திட்டம். அதனால் தான் அவர் அப்படி பேசுகிறார். திராவிட மாடலை பற்றி ஒரு புரிதல் வேண்டும். இன்றைக்கு நாங்கள் ஏன் திராவிட மாடல் என்று சொல்கிறோம் என்று சொன்னால், அது எங்களுடைய இனத்தினுடைய குறியீடு என்பது ஒரு புறம்.

Mano Thangaraj

ஆனால் இந்திய துணை கண்டத்தில் கல்வி மறுக்கப்பட்டு, வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு அனைத்தும் மறுக்கப்பட்டு ஒரு வர்க்க சமூகம் கட்டமைக்கப்பட்டது. ஜாதியின் அடிப்படையில் அந்த கட்டமைப்புக்கு எதிரான போராட்டம் என்பது திராவிட இயக்கங்களின் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டது. எனவே சமூக நீதியை எல்லோரையும் உள்ளடக்கி இருக்கக்கூடிய திட்டங்களை உள்ளடக்கி இருக்கக்கூடிய அந்த மாடலின் பெயர் தான், திராவிட மாடல். 

மேலும் படிக்க | கள்ளழகரை வரவேற்ற மதுரை மக்கள்: விண்ணதிர ஒலித்த கோவிந்தா முழக்கம்

இது ஒரு மேஜிக்கல் நேம் அல்ல. இது பெரிய மாந்திரீக வார்த்தை ஒன்றும் இல்லை. இது எளிமையாக எல்லோரும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு அற்புதமான வார்த்தை. அனைத்து மக்களையும் உள்ளடக்கி இருக்கக்கூடிய, அனைத்து மக்களுக்கும் அரசினுடைய பயன் கிடைக்கக்கூடிய திட்டங்களை வகுத்து அளிக்கக் கூடிய ஒரு மாடல், திராவிட மாடல்

திராவிட மாடலின் வெற்றி

இந்த மாடலுடைய வெற்றி என்பதற்கு ஒரு உதாரணத்தை நான் சொல்கிறேன். இன்றைக்கு உயர்கல்வியில் பெண்களுடைய பங்களிப்பில் இந்தியாவினுடைய சராசரி 24.1 சதவீதம். ஆனால், நம்முடைய மாநிலத்தினுடைய வளர்ச்சி என்பது 72 சதவீதம். இந்த மாடல் எக்ஸ்பையரா ( Expire) அல்லது இருக்கா. இன்னும் சமூகத்தில் எவ்வளவு ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது. இந்த அரசியல் பேச்சுகளை எல்லாம் கவர்னர்கள் பேசக்கூடாது. 

பட்ஜெட்டில் ஒன்றை அறிவிக்கிறார், பேசுகிறார் என்றால் திராவிட இயக்க அரசியல், திராவிட இயக்க கொள்கை, திராவிட மாடல் ஆட்சியினுடைய அடிப்படையில் தீட்டப்பட்ட திட்டங்களை இவற்றை தொகுத்து தான் பேசுகிறார். அப்படி பேசும் ஆளுநர் எப்படி கூச்சம் இல்லாமல் வெளித்தளத்தில் வந்து அதை விமர்சிக்கிறார் என்று எனக்கு தெரியாது, அவரிடமே கேளுங்கள்" என்றார். 

புரிதல் இல்லை

அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ஆளுநருக்கு புரிதல் இல்லை என்று சொல்லலாமா என்று கேட்டதற்கு 'நிச்சயமாக அவருக்கு புரிதல் இல்லை' என்றார் அமைச்சர். மேலும், "இந்தியாவின் பன்முகத் தன்மையை அறியாதவர்கள் இந்திய அரசியல் பேச முடியாது. இந்தியாவுடைய பன்முகத் தன்மை என்பது இந்தியாவில் பல இனத்தவர்கள் வாழ்கிறார்கள். திராவிடர்கள் பெரும்பான்மையராக இருக்கிறார்கள். ஆரியர்கள் வாழ்கிறார்கள். மங்கோலியர்கள் வாழ்கிறார்கள், பல இனத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். எனவே பல இனங்களை உள்ளடக்கிய நாடு, இந்த நாடு.

இவர்கள் ஏற்றத்தாழ்வு சமூகத்தை கட்டமைத்தாலும் பல ஜாதிகளை உள்ளடக்கி இருக்கக்கூடிய நாடு, இந்த நாடு. பல மதங்களை உள்வாங்கி அவர்கள் எல்லாம் ஏற்றுக் கொண்டு அவர்கள் வழிபாட்டு முறைகளை அந்த சமய சடங்குகளை எல்லாம் உள்வாங்கி இருக்கக்கூடிய நாடு இது. எனவே இது பன்முக தன்மை கொண்ட நாடு.

Mano Thangaraj

சுய அடையாளங்களை உதற முடியாது

இந்த பன்முக தன்மையில் அவருடைய சுய அடையாளத்தை விளக்க வேண்டிய தேவையில்லை. திராவிடம் என்பது இந்திய நாட்டிற்குள் இருந்தாலும் எங்களுடைய சுய அடையாளங்களை நாங்கள் விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. திராவிடம் என்பது எல்லோரும் சமம் என்கின்ற கொள்கை. அந்த கொள்கையை நாங்கள் யாரிடம் விட்டுக் கொடுக்கணும், எதற்கு அதைப் பற்றி நாங்கள் அச்சப்படனும். 

இதை உள் வாங்காதவர்கள் இந்திய பன்முக தன்மையை புரிந்து கொள்ளாதவர்கள், சனாதனம் பேசுகிறவர்கள். மற்றவர்களை ஏளனமாக பார்க்கிறவர்கள், சாதிய கோட்பாடுகளை ஏற்றுக் கொள்கிறவர்களால் இந்த புரிதல் எந்த சூழ்நிலையிலும் வராது. அதன் வெளிப்பாடு தான், நாம் அங்குமிங்கும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்" என்றார்.

ஏன் மறுக்க வேண்டும்

ஆளுநர் செலவின கணக்கு குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு,"இப்பொழுது எனக்கு ஒரு கேள்வி இருக்கு. இந்த ஆளுநர் எதைத் தான் சரியாக சொன்னார். எதை சொன்னாலும் அவர் மறுக்க தான் செய்வார். ஒரு கவர்மெண்ட் செலவுகளை எந்த வகையில் சுருக்க முடியும் என்று பார்ப்பது ஒரு நல்ல அணுகுமுறை. பொருளாதார சிக்கல் இருக்கிறது என்று சொன்னால் முதலில் செலவினங்களை குறைக்கணும். 

தேவையில்லாத செலவினங்கள் அல்லது கடந்த காலங்களில் தேவைக்கு மீறி செலவு செய்யப்பட்டவற்றை குறைப்பதற்கான நடவடிக்கையை அந்த துறை எடுக்கின்றதே தவிர இது வேறொன்றுமில்லை. ஆனால் அது நடக்கவில்லை என்று ஏன் மறுக்கவேண்டும்" என்று கூறினார்.  

ஆன்லைன் ரம்மி ஆன்லைன் மோசடிகளை கட்டுப்படுத்த தமிழ்நாட்டை பொறுத்தவரை கடுமையான முயற்சிகளை எடுத்து வருவதாகவும், மத்திய அரசும் இதே நோக்கத்துடன்  ஒன்றுபட்டு மக்கள் பிரச்சினைகளை தயக்கம் இல்லாமல் செய்ய வேண்டும் என்றும் செய்வார்களா? என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் என்றார், அமைச்சர்.

மேலும் படிக்க | நாடாளுமன்றத்துக்கு போகாத அன்புமணி ராமதாஸ் டெல்லியில் கேட்க தைரியம் இருக்கிறதா? - செந்தில் பாலாஜி கேள்வி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News