கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் பரிசோதனைகள் அதிகரிக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Again Corono Spread : தமிழகத்தில் மீண்டும் கொரோனாத் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகரித்து வருவதால் பரிசோதனைகள் தீவிரம்    

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Jun 16, 2022, 01:05 PM IST
  • தமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனாத் தொற்று
  • பரிசோதனைகள் அதிகரிக்கப்படும் - அமைச்சர் மா.சுப்ரமணியன்
  • ‘பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் குறைவுதான்’
கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் பரிசோதனைகள் அதிகரிக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்  title=

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனாத் தொற்று அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. மே மாதம் 12ம் தேதி கொரோனா தொற்றுடன் 441 பேர் தனிமைப்படுத்தலில் இருந்தனர். அப்போது தொற்று உறுதியாவது 0.3 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இந்த மாதம் ஜூன் 1ம் தேதியன்று தொற்று உறுதியாவது 0.8 சதவீதமும், தனிமைப்படுத்துதலில் 629 பேரும் இருந்தனர். ஆனால், தற்போதைய சூழலில் ஆயிரத்து 332 பேர் தொற்றுடனும், தொற்று உறுதியாவது 1.5 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. 

மேலும் படிக்க | தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்றால் உயிரிழப்பு

இதனால் முதற்கட்ட விதிமுறைகள் விமான நிலையத்தில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து கொரோனா தொற்றுள்ளவர்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழக சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன. சந்தேகப்படும்படியான நபர்களுக்கு பரிசோதனை கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

சென்னையை அடுத்த கீழ்க்கட்டளையில் உள்ள  குடியிருப்புப் பகுதிகளில் கொரோனா தொற்று மாதிரி பரிசோதனை எடுக்கும் பணியை தமிழக சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் ஆய்வுப்பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து செய்தியாளர்களையும் சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், ‘கொரோனா தொற்று எண்ணிக்கை பரவலாக அதிகரிக்க தொடங்கிய சூழலில் முதலமைச்சர் அறிவுறுத்தல்படி தொற்று அதிகமாக உள்ள இடங்களில் கள ஆய்வு செய்யப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் 15 மண்டல சுகாதார அலுவலர்களிடம் கள ஆய்வு செய்யப்பட்டது. கிழ்கட்டளையில் ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு தொற்று ஏற்பட்டதால் அடுக்குமாடி குடியிருப்ப ஆய்வு செய்யப்பட்டது. கொரோனா தடுப்பு பணிகளை செய்யப்பட்டு. செங்கல்பட்டில் 95 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளதால் ஆய்வு செய்து வருகிறோம். தொற்று ஏற்பட்டவர்கள் நலமாக உள்ளனர். 

உலகம் முழுவதும் கொரொனா தொற்று பரவ தொடங்கி உள்ளது. தமிழகத்தில் தான் குறைவாக தான் பரவி உள்ளது. டெல்லியில் 1375 பேருக்கும் கேரளாவில் 3419 பேருக்கும் மராட்டியத்தில் 4024 பேருக்கும் தொற்று ஏற்பட்டு உள்ளது. ஸ்பெயினில் 36 ஆயிரம், பிரேசில் 40 ஆயிரம், ஜெர்மனி மற்றும் பிரான்சில் 64 ஆயிரம், அமெரிக்காவில் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். உலக நாடுகளில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

மேலும் படிக்க | இரவு நேரங்களில் அலட்சியம் காட்டும் அன்னூர் அரசு மருத்துவமனை ஊழியர்கள்.!

அந்த வகையில் தமிழகத்தில் குறைவு என்ற மன நிலை இருந்தாலும் தற்காத்து கொள்வது அவசியமானது. பொது நிகழ்ச்சிகள், சமூக விழாக்களில் முக கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியமானது. இதை முதலமைச்சர் வலியுறுத்தி வருகிறார். தினமும் 15 ஆயிரம் பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னையில் 2500 பரிசோதனை செய்யப்படுகிறது. தொற்று வேகமாக பரவுவதாக கூடுதலாக பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்படுகிறது’ என்று கூறினார். 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News