வாகன நிறுத்தம் இல்லாத மண்டபம், திரையங்கை செயல்படவிடமாட்டேன் - துரைமுருகன்

காட்பாடியில் வாகன நிறுத்தம் இல்லாத மண்டபங்கள், திரையங்கை செயல்படவிடமாட்டேன் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 4, 2022, 10:07 AM IST
  • தமிழகத்தில் 'இல்லம் தேடி கல்வி' எனும் திட்டத்தை கடந்த மாதம் தமிழக முதவர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
  • வேலூர் மாவட்டத்தில் 'இல்லம் தேடி கல்வி திட்டத்தின்' கீழ் உள்ள மையங்களுக்கான திறப்பு விழா நடைபெற்றது.
வாகன நிறுத்தம் இல்லாத மண்டபம், திரையங்கை செயல்படவிடமாட்டேன் - துரைமுருகன் title=

'இல்லம் தேடி கல்வித் திட்டத்தின்' கீழ் உள்ள மையங்களுக்கான துவக்க விழா இன்று வேலூர் காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு திட்டத்தினை துவக்கி வைத்தார்.  கொரோனா காலகட்டத்தில் பள்ளி மாணவர்கள் பயன்படும் வகையில் தமிழகத்தில் 'இல்லம் தேடி கல்வி' எனும் திட்டத்தை கடந்த மாதம் தமிழக முதவர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டத்தில் 'இல்லம் தேடி கல்வி திட்டத்தின்' கீழ் உள்ள மையங்களுக்கான திறப்பு விழா காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

ALSO READ | சென்னையில் மாஸ்க் அபராதம்; ஒரே நாளில் ரூ.2 லட்சம் வசூல்

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு திட்டத்தினை துவக்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், மக்களுக்கான திட்டங்களை துவக்கும் நிகழ்ச்சிகளை மக்கள் மத்தியில் தான் வைக்க வேண்டும். இது போன்ற நிகழ்ச்சிகளை கிராமங்களுக்கு மத்தியில் வைத்தால் செய்தி நேரடியாகவும் உடனடியாகவும் மக்களை சென்று சேரும்.  அதை தவிர்த்து இது போன்ற மண்டபங்களில் வைப்பதால் யாருக்கு என்ன பயன்? திட்டம் எப்படி போய் சேரும்? எது எது எங்க எங்க இருக்க வேண்டுமோ அங்கங்குதான் இருக்க வேண்டும் என்றார். 

duri

மேலும் அவர் பேசுகையில், காட்பாடி பகுதியில் புதிது புதிதாக திருமண மண்டபங்கள், திரையரங்குள் திறக்கப்பட்டு வருகிறது. இவற்றுக்கு போதிய வாகன நிறுத்தும் இடம் இல்லாததால் சாலையில் வாகனங்களை விடுகிறார்கள், இதனால் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படுகிறது. போதிய வாகன நிறுத்தம் இல்லாத திருமண மண்டபம் மற்றும் திரையரங்கிற்க்கு மாவட்ட ஆட்சியர் எப்படி அனுமதி கொடுத்தார்? நிறுத்தம் இல்லாத கட்டிடங்களை செயல்பட அனுமதிக்க கூடாது. ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நானே நடவடிக்கை எடுப்பேன். 

காட்பாடி பகுதியில் எனக்கே தெரியாமல் புதிதாக ஒரு திரையரங்கம் முழைத்து இருக்கிறது, ஏற்கனவே அப்பகுதியில் வாகன நெரிசல் இருக்கக் கூடிய நிலையில் மேலும் இது போன்று ஒரு திரையரங்கு வருவதனால் அப்பகுதியில் கூடுதலாக வாகன நெரிசல் ஏற்பட கூடிய வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியரான நீங்கள் இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை ஆனால், இது குறித்து நிச்சயமாக நான் நடவடிக்கை எடுப்பேன். அந்த திரையரங்கத்திற்கு எதன் அடிப்படையில் நீங்கள் (மாவட்ட ஆட்சியர்) அனுமதி அளித்தீர்கள் என்பது போன்ற முழு விவரத்தை எனக்கு அளிக்க வேண்டும் என்றார்.  இது காட்பாடி தொகுதி, என் கண் இமையில் இருந்து ஒரு பொருளும் தப்பிவிட முடியாது என்று ஆட்சியரிடம் கடிந்து கூறினார்.

ALSO READ | போராட்டத்தில் அசர வைத்த பகுதி நேர ஆசிரியர்..! கோரிக்கை நிறைவேறுமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News