மதுரை திருமங்கலம் அடுத்துள்ள டி. கல்லுப்பட்டி அருகே உள்ள சிட்டுலொட்டி கிராமத்தில் சாமிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான இடத்தின் தோட்டத்தில் ஒரு கிணறு உள்ளது. அந்த கிணற்றில் நேற்று ஏதோ மிதப்பது போன்று தெரிந்ததால் சாமிராஜ் பதற்றம் அடைந்தார்.
இதையடுத்து கூர்ந்து கவனித்ததில் மிதப்பது சாக்கு மூட்டை என்று தெரிய வந்தது. அடையாளம் தெரியாத வகையில் பெரிய உருவத்துடன் சாக்கு மூட்டை கிணற்றில் மிதந்ததால் பதறிய சாமிராஜ் பேரையூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் பேரையூர் காவல் நிலைய கண்காணிப்பாளர் சரோஜா தலைமைலான போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாக்கு மூட்டையை மீட்டனர். பின்னர் மூட்டையினுள்ளே ஆண் சடலம் ஒன்று கை கால் கட்டப்பட்ட நிலையில் இருந்தது தெரிய வந்தது.
மேலும் படிக்க | செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமர்
பின்னர் அந்த உடலை மீட்ட போலீஸார் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் நேரில் ஆய்வு செய்தார். இது குறித்து பேரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அந்த சடலம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள எம் சுப்புலாபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலபதி மகன் பாலாஜி என்பவருடையது என தெரிய வந்தது.
மேலும், திமுக பிரமுகரான பாலாஜி (வயது 25) கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. இதன் காரணமாக மனைவி தர்ஷினி தாய் வீட்டில் உள்ளார் என தெரியவந்தது. மேலும், கடந்த இருபத்தி நான்காம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பாலாஜி வீடு திரும்பவில்லை என்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
பணி நிமித்தமாக அவர் வெளியே சென்றிருப்பார் என்ற யூகத்தோடு வீட்டார் காத்திருந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இதைத் தொடர்ந்து இவர் எதற்காக கொலை செய்யப்பட்டார், யார் கொலை செய்தார்கள் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | தற்கொலை செய்த போலீஸ்காரரின் செல்போனை திருடி விற்ற 2 போலீசார் பணியிடை நீக்கம்.!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ