ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினம் 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சூர்யா மாரியை ரிசார்ட் ஒன்றிற்கு அழைத்து வந்த நிலையில் இன்று மாரி இங்கு எதுக்கு ஹஸ்பண்டு சார் கூட்டிட்டு வந்தீங்க என்று கேள்வி எழுப்ப நம்மளை யாரோ பிரிக்க பாக்கறாங்க மாரி, முருகன் கல்யாணத்தில கூட திடீர்னு முருகன் காணாம போயிட்டதா சொன்னாங்க, நமக்கு பின்னாடி ஏதோ சதி நடக்குதுன்னு எனக்கு நல்லாவே தெரியுது நாம சேர்ந்து வாழனும் அதுக்காகத்தான் உன்னை இங்கு கூட்டிட்டு வந்ததாக சூர்யா சொல்கிறான்.
மேலும் படிக்க | குஷி படத்தில் அதிக சம்பளம் வாங்கியது யார்? விஜய் தேவரகொண்டாவா? சமந்தாவா?
இன்னொரு பக்கம் தாரா, ஜாஸ்மின் மற்றும் ஸ்ரீஜா ஆகியோர் சூர்யா மாரியுடன் எங்கே போனான் என்று தெரியாமல் உச்சகட்ட டென்ஷனில் இருக்கின்றனர். சூர்யா உங்களை மீறி எதையும் செய்ய மாட்டான் என்று ஸ்ரீஜா சொல்கிறாள். அடுத்து தாரா லாரி டிரைவருக்கு போன் செய்து என்ன ஆச்சு எங்க இருக்காங்கன்னு கண்டுபிடிச்சியா என்று கேட்க எனக்கு தெரிந்து ஏதாச்சும் ரெசார்ட்டுக்கு தான் போய் இருக்கணும் தேடி கண்டுபிடிக்கிறேன் கொஞ்சம் டைம் கொடுங்க என சொல்லி போனை வைக்கிறான்.
இங்கே ஹோட்டல் அறையில் சூர்யா உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என்று மாரியை ஒரு ரோஜா தோட்டத்திற்கு அழைத்துச் சென்று ரோஜா செடி ஒன்றை கிப்ட் கொடுக்க மாரி அந்த பூ தொட்டியை தூக்கிக் கொள்ள சூர்யா மாரியை தூக்கிக்கொண்டு ரூமுக்கு வர இருவருக்கும் இடையே ரொமான்ஸ் உருவாகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க | 7ஜி ரெயின்போ காலனி பார்ட் 2வா? வாவ்.. செம அப்டேட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ