Lok Sabha Elections 2024: தங்களின் பல நாள் கோரிக்கை நிறைவேற்றப்படாததாலும், வேறு சில அதிருப்திகளாலும், தமிழ்நாட்டில் உள்ள சில கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் செங்கலுத்துப்பாடி கிராம மக்கள், வேங்கை வயல் கிராம மக்கள், தூத்துக்குடி பொட்டலூரணி கிராம மக்கள், ஏகனாபுரம் கிராம மக்கள் உள்ளிட்ட சில கிராமத்தி சேர்ந்த மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது செங்கலுத்துப்பாடி மலை கிராமம். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பொது மயான வசதி இல்லாத காரணத்தினால் இன்று இங்கு உள்ள பொதுமக்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இன்று 12 மணி நிலவரப்படி ஒரு ஓட்டு மட்டுமே பதிவு ஆகி உள்ளது.
இது குறித்து பொதுமக்கள் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டம் ஏற்காடு செங்கலுத்துப்பாடி கிராம மக்கள் பல ஆண்டு காலமாக பொது மயான வசதி கேட்டு போராடி வருகிறோம். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது இதுபோன்ற தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினோம். அங்கு வந்த அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் இதை செய்து தருவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து இந்தப் போராட்டத்தை நாங்கள் கைவிட்டோம். ஆனால் தேர்தல் முடிந்து மூன்று வருட காலம் ஆகியும் இதுவரை செய்து கொடுக்காததால் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு நாங்கள் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக வீடு தோறும் கருப்புக்கொடி கட்டி பேனர் வைத்து எங்களது எதிர்ப்பை தெரிவித்தோம். அப்போது அங்கு வந்த ஏற்காடு வட்டாட்சியர் தனியார் அனுபவத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள முள்வேலியை அகற்றி தருவதாகவும் தேர்தல் முடிந்தவுடன் பொதுமயான வசதி அந்த இடத்தில் ஏற்படுத்தி தருவதாகவும் வாக்குறுதி அளித்துவிட்டு சென்றார். ஆனால் இதுவரை எங்களுக்கு எந்த ஒரு வசதியும் செய்து தராத காரணத்தினால் இந்த தேர்தலை நாங்கள் புறக்கணிக்கிறோம் என்று கூறினர்.
இதன் காரணத்தினால் ஏற்காடு செங்கலுத்துப்பாடி கிராமத்துக்கு உட்பட்ட எட்டாம் எண் பூத் வெறிச்சோடி காணப்படுகிறது தற்போது நிலவரப்படி இங்கு பிஎல் 2 மட்டும் ஒரு ஓட்டினை பதிவு செய்துள்ளார். இதுவரை இங்கு எந்த அதிகாரியும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்று கிராம மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் இனி வரும் தேர்தல்களையும் நாங்கள் புறக்கணிக்க உள்ளதாக கிராம மக்கள் கூறியுள்ளனர்.
வேங்கை வயல் கிராம மக்கள்
வேங்கை வயல் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து உள்ள நிலையில், அதிகாரிகள் சமாதானம் செய்தும் ஓட்டு போட அந்த கிராம மக்கள் வர முடியாது என்று கூறியதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் குடிநீர் தொட்டிகள் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் பல மாதங்கள் ஆகியும் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், அப்பகுதியில் உள்ள மக்கள் கோபமாக உள்ளனர்.
மேலும் படிக்க | நாங்க போட்டாச்சு... நீங்க? ஜனநாயக கடமையாற்றிய தமிழக அரசியல் பிரமுகர்கள்!!
தூத்துக்குடி பொட்டலூரணி கிராம மக்கள்
தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் கிராமத்தின் அருகே உள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் இன்று பிற்பகல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அந்த கிராமத்திற்கு திமுகவினருடன் காரில் சென்றுள்ளார்
அப்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராம மக்கள் அனிதா ராதாகிருஷ்ணன் காரை விட்டு இறங்கவிடாமல் இவ்வளவு நாள் எங்கே போயிருந்தீர்கள் இப்போது ஏன் வருகிறீர்கள் எனக் கூறி பேச்சு வார்த்தை வேண்டாம் நாங்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடத்தான் போகிறோம் பின்வாங்க மாட்டோம் எனக் கூறி விரட்டி அடித்தனர் இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஏகனாபுரம்- நாகப்பட்டு கிராம மக்கள்
ஏகனாபுரம், நாகப்பட்டு, கிராம மக்கள், பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை புறக்கணித்துள்ளனர். அரசு அதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு பயந்து அரசு ஊழியர்கள் 9 பேர் மட்டுமே இதுவரை வாக்களித்தனர். பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு வகையில் ஏகனாபுரம் கிராம மக்கள சுமார் 630 நாள்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
இளையான்குடி
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சித்தூரணியில் சாலை வசதி இல்லாதது, இளையான்குடி நகர் பகுதி கழிவுநீர் வருவது உள்ளிட்ட பிரச்சினை தொடர்பாக கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கத்துள்ளனர். இதனால் அந்த வாக்குச் சாவடியில் 4 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. அந்த வாக்குச்சாடியில் சீத்தூரணி, கல்லூரணியைச் சேர்ந்த மொத்தம் 850 வாக்காளர்கள் உள்ளனர்.
மேலும் படிக்க | வாக்காளர்கள் கவனத்திற்கு... ஓட்டு போட செல்லும்போது 'இதை' கொண்டு போகாதீர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ