மறைந்த நடிகர் விவேக் மனைவியின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றுமா?

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அலுவலகத்தில் நேரில் சென்று சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Apr 25, 2022, 05:09 PM IST
  • கடந்த ஆண்டு நடிகர் விவேக் காலமானர்.
  • அவரது மனைவி முதலமைச்சரை சந்தித்து மனு கொடுத்துள்ளார்.
  • தங்கள் ஏரியாவிற்கு விவேக் பெயரை வைக்க வேண்டும் என கேட்டுள்ளார்.
மறைந்த நடிகர் விவேக் மனைவியின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றுமா?  title=

மறைந்த திரைப்பட நடிகர் விவேக்கிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் நிறைந்துள்ளது.  தனது நகைச்சுவையின் மூலம் மக்களிடம் சிரிப்பை மட்டும் வரவழைப்பதை நோக்கமாக கொள்ளாமல் நகைச்சுவை மூலம் பலறையும் சிந்திக்க செய்தவர் விவேக். இவரது காமெடி அனைத்திலும் சமூகத்திற்கு தேவையான விழிப்புணர்வு கருத்துக்கள் நிறைய இடம்பெற்று இருக்கும்.  இவர் தனது திறமையின் மூலம் பத்ம ஸ்ரீ உட்பட பல உயரிய விருதுகளை வாங்கியுள்ளார்.  இவருக்கு திருமணமாகி அருட்செல்வி என்கிற  மனைவியும், அமிர்தா நந்தினி, தேஜஸ்வினி என்கிற இரண்டு பெண்குழந்தைகளும், பிரசன்ன குமார் என்கிற பையனும் உள்ளனர்.  இதில் அவரது மகன் பிரசன்ன குமார் கடந்த 2015ம் ஆண்டு உடல்நல குறைவால் இறந்துவிட்டார்.

மேலும் படிக்க | சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டிய பாஜக எம்.எல்.ஏ.!

அப்துல் கலாமின் தீவிர ரசிகரான இவர் கடந்த 2010ம் ஆண்டு பசுமை கலாம் என்கிற திட்டத்தை தொடங்கி தமிழகம் முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவதை லட்சியமாக கொண்டிருந்தார்.  கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதி இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார், பின்னர் சிகிச்சை பலனின்றி ஏப்ரல்-17ம் தேதி அதிகாலை மரணமடைந்தார்.  இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.  இவரின் லட்சியமான மரக்கன்றுகள் நடும் பணியை இவரது ரசிகர்கள் செய்து வருகின்றனர்.

தற்போது இவர் இறந்து முழுமையாக ஒரு ஆண்டு நிறைவுபெற்று விட்டது, இந்நிலையில் இன்று (25/04/2022) நடிகர் விவேக்கின் மனைவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது அலுவலகத்திற்கு நேரில் சென்று சந்தித்துள்ளார்.  முதல்வரை சந்தித்தவர் அவரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்துள்ளார், அந்த கோரிக்கை என்னவென்றால் தனது கணவரும், நடிகருமான திரு,விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு விவேக்கின் பெயரை சூட்ட வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை விடுத்தார்.  மேலும் அவருடன் விவேக் மகள் அமிர்தாநந்தினி, விவேக் பசுமை கலாம் இயக்கத்தின் நிர்வாகிகள் முருகன், லாரன்ஸ் மற்றும் அசோக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

vivek

மேலும் படிக்க | துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் மசோதா நிறைவேற்றம்...ஆளுநருக்கு தமிழக அரசின் செக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News