ஆவின் முதல் விருது நகர் சிறைச்சாலை வரை... ராஜேந்திரபாலாஜியின் கண்ணாமூச்சி ஆட்டம்...

ராஜேந்திரபாலாஜியின் கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த தேடல்..ஓடல்... துரத்தல்...  

Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jan 6, 2022, 10:26 AM IST
  • முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜனவரி 20ம் தேதி வரை நீதிமன்ற காவல்
  • ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் கோரி அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் மனு தாக்கல் செய்ய உத்தேசம்
  • ராஜேந்திர பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனுத் தாக்கல் செய்ய முடிவு
ஆவின் முதல் விருது நகர் சிறைச்சாலை வரை... ராஜேந்திரபாலாஜியின் கண்ணாமூச்சி ஆட்டம்... title=

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜனவரி 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க ஸ்ரீவில்லிப்புத்தூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரம்வீர் உத்தரவிட்டார்.

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவரும் விருதுநகர் மாவட்ட அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனம் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. 

இதுதொடர்பாக கடந்த ஆண்டு நவ.15-ஆம் தேதி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் ராஜேந்திர பாலாஜி (Former Miinister Rajendra Balaji) மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து ராஜேந்திர பாலாஜி ஜாமீன்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த டிசம்பர் மாதம் 17ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

ALSO READ | தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது 

அன்று, அதிமுக சார்பில் தமிழக அரசை கண்டித்து விருதுநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த ராஜேந்திரபாலாஜியிடம் முன்ஜாமீன் மனு தள்ளுபடி குறித்து தெரிவிக்கப்பட்டதும் அங்கிருந்து சென்ற அவர் தலைமறைவானார்.

கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த அவர் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு (Petition filed in High Court) தாக்கல் செய்திருந்தார் இன்று அந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வரவிருந்த நிலையில் நேற்று கர்நாடக மாநில ஹசன் பகுதியில் வைத்து தமிழக போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் அவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவல்கள் அடிப்படையிலேயே, அவருக்கு உதவிய அதிமுக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டனர். கடந்த 31ம் தேதி தமிழக எல்லையை ராஜேந்திரபாலாஜி கடந்திருப்பதை கண்டுபிடித்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

குறிப்பிட்ட தொலைவிற்கு பிறகு வேறு காரில் பயணம் செய்யும் உத்தியை கடைபிடித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நேற்று கைது செய்யப்பட்டார். 

ALSO READ | விருதுநகர் அழைத்துச் செல்லப்படும் ராஜேந்திரபாலாஜி..! அடுத்தது என்ன?

இன்று உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வரும் நிலையில், அதற்கு முன்னதாக அவரை கைது செய்ய வேண்டும் என்பதில் தனிப்படை போலீசார் உறுதியாக இருந்தனர். 

தனிப்படை ஆய்வாளர் உட்பட ஓசூர் நகர ஆய்வாளர் உட்பட 18 போலீசார் கொண்ட தனிப்படை போலீசார்தான் ராஜேந்திரபாலாஜியை கைது செய்துள்ளனர். ராஜேந்திரபாலாஜியிடம் தொடர்பில் உள்ளவரவர்களின் தொலைபேசிகளை கண்காணித்ததில் அவர் கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியில் இருப்பதை உறுதிப்படுத்திய போலீசார், நேற்று கைது செய்வதற்கு முன்பாக அவரை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவந்தனர்.

அவர் சென்ற காரை பின் தொடர்ந்த போலீசார் ஹசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அவரது காரை வழிமறித்து கைது செய்தனர். இதைத்தொடர்ந்து மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்த பிறகு, கர்நாடகாவிலிருந்து தமிழகம் அழைத்து வரப்பட்ட ராஜேந்திர பாலாஜி நேற்று மாலை விருதுநகர் போலீசாரிடம் (Virudunagar police) ஒப்படைக்கப்பட்டார்.

TAMILNADU

ராஜேந்திரபாலஜியுடன் சேர்த்து அவருக்கு உதவியதாக அவருடன் இருந்த பாஜகவை சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்டப் பொதுச்செயலாளர் ஓசூர் சானமாவு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன், அவரது உதவியாளர் நாகேஷ், கிருஷ்ணகிரி பாஜக நகர செயலாளர் ரமேஷ் மற்றும் விருதுநகர் மாவட்ட அதிமுக ஐ.டி விங் பிரமுகர் பாண்டியராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 

ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 5 பேரையும் துப்பாக்கி ஏந்திய போலீசார் உதவியுடன் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்த விருதுநகர் மாவட்ட போலீசார், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

அங்கு அவரிடம், மதுரை சரக டிஐஜி காமினி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் ஆகிய இருவரும் மூன்று மணி நேரம் தீவிர விசாரணையை போலீசார் மேற்கொண்டனர்.

Also Read | முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பில் இருந்த 2 பேர் கைது

விசாரணைக்குப் பின்னர் அவர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொரானா பரிசோதனை மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரம்வீர் முன் ராஜேந்திர பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். 

அதிமுக முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஜனவரி 20 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் கோரி அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையும் மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ | இறுகும் பிடி! ராஜேந்திர பாலாஜியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News