திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீர்ப் பாதையில் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்றின் காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், நேற்று காவேரி மருத்துவனமையின் செயல் இயக்குனர் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலத்தில் வயதின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது. தற்போது சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் வந்துள்ளது.
அதற்குத் தேவையான மருந்துகள் செலுத்தப்படுகின்றன. அவரை 24 மணி நேரமும் டாக்டர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கவனித்துக்கொள்கிறது. வீட்டிலேயே ஆஸ்பத்திரி வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டிருக்கிறது. கருணாநிதியின் உடல் நிலையை கவனத்தில் கொண்டு, அவரை யாரும் நேரில் பார்க்க வர வேண்டாம் என்று டாக்டர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.
இந்நிலையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்குச் சென்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதி உடல் நலன் குறித்து விசாரித்தனர்.
Wow, this is the first time where senior AIADMK leaders are at @kalaignar89 's
Gopalapuram residence!Nice gesture.. Prayers for @kalaignar89 #karunanidhi pic.twitter.com/soSR1w1MWM
— Hari Prabhakaran (@HariIndic) July 26, 2018
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்கள், கருணாநிதி விரைவில் உடல் நலம் பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்தனர். மேலும் அரசியல் பண்பாட்டின் அடிப்படையில் கருணாநிதியின் உடல் நலத்தை விசாரிக்க வந்ததாகவும் அவர்கள் கூறினர்.