சட்டப்பேரவை தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன், தொகுதி பின்னர் அறிவிக்கப்படும்: கமல்

சட்டப்பேரவை தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன் என்று மதுரையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 14, 2020, 01:51 PM IST
சட்டப்பேரவை தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன், தொகுதி பின்னர் அறிவிக்கப்படும்: கமல் title=

சட்டப்பேரவை தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன் என்று மதுரையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் (TN Assembly Election 2021) நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். AIADMK – DMK இடையே எப்போதும் வழக்கம் போல நேரடி போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில், ரஜினியும் (Rajinikanth) ஜனவரி மாதம் கட்சி துவங்குவதாக அறிவித்துள்ளார். 

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி (Makkal Needhi Maiam) தலைவர் கமல்ஹாசன், சீரமைப்போம் தமிழகத்தை எனும் பெயரில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் முதல் கட்டமாக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இதில் முதல் கட்டமாக மதுரையில் கமல்ஹாசன் (Kamal Haasan) தனது முதல் பிரச்சாரத்தை நேற்று தொடங்கியுள்ளார். 

No description available.

Picture courtesy: @Devendran

ALSO READ | தமிழகத்தில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை தொடக்கி வைத்தார் EPS!

இதை தொடர்ந்து, இரண்டாவது நாளான இன்று மதுரையில் (Madurai) தனது பிரச்சாரத்தை துவங்கியுள்ள கமல் ஹாசன் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது கூறியதாவது.. நேர்மையானவர்கள் அனைத்து கட்சிகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் ஏன் அங்க இருக்க வேண்டும். நேர்மையான கட்சியில் இருக்கலாமே. ஆளும் கட்சியின் மீது விமர்சனம் மாநிலம் முழுவதும் இருக்கிறது. புகழும், ஆதரவும் எங்களுக்கு அதிகரிக்கும் என்பது அவர்களுக்கு பதற்றம் இருக்கலாம். 

No description available.

Picture courtesy: @Devendran

நானும், ரஜினியும் கூட்டணி அமைத்தால் வெற்றி நிச்சயம். ஆனால், 31 ஆம் தேதிக்கு பிறகு யோசிப்போம். கூட்டணி குறித்து யார் யாரெல்லாம் தன்னை அணுகுகிறார்கள் என்பதை தற்போது வெளியில் சொல்லக் கூடாது. என் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றால், மதுரைக்கு வந்துதான் செல்ல வேண்டும். எனவே, எனக்கு நெருக்கமான ஊர் என்பதால், பிரச்சாரத்தை இங்கிருந்து தொடங்கியுள்ளேன். வரும் சட்டப்பேரவை தேர்தலில் கட்டாயம் போட்டியிடும். ஆனால், எங்கு என்பது பிறகு தான் முடிவு செய்யப்படும். என்னை நாத்திகவாதி என்று கூறாதீர்கள். நான் பகுத்தறிவுவாதி" என அவர் தெரிவித்துள்ளார். 

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News