கலைஞரின் மகள் உரிமை (KMUT) திட்டத்தில் இருந்து சுமார் 1,27,000 பெண்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்வர் முக ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. சொத்து வைத்திருப்பவர்கள், நிலம் வைத்திருப்பவர்கள், அதிக வருமானம் கொண்டவர்கள் மற்றும் அரசு வேலையில் உள்ள பெண்களின் பெயர்கள் கலைஞரின் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டத்தில் இருக்கும் பெண்கள் இறந்துவிட்டால் பெயர் நீக்கப்படும், குடும்ப உறுப்பினர்கள் கார், நிலம் போன்றவற்றை வாங்கினாலும், அரசு வேலை கிடைத்தாலும், ஆண்டுக்கு 2.5 லட்சத்துக்கு மேல் சம்பாதித்தாலும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்தாலும் அவர்களின் பெயர் நீக்கப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க | விஜய்க்கு அந்த நோக்கம் இருக்கத்தான் செய்யும் - மதுரையில் திருமா பேட்டி!
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கப்பட்ட போது, KMUT திட்டத்தில் உதவி பெறுபவர்களின் எண்ணிக்கை 1.15 கோடியாக இருந்தது. தற்போது இது 1.14 கோடியாக குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் தெரிய வந்துள்ளது. அரசாங்கத்திலிருந்து ஓய்வுபெற்ற தொழிலாளர்களைப் போலல்லாமல், ரூ. 1000 உதவி தொகை பெறும் பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் தாங்கள் இன்னும் உயிருடன் இருப்பதற்கான வாழ்க்கைச் சான்றிதழைச் சர்மரபிக்க வேண்டியதில்லை. அரசு உதவி பெறும் பெண்கள் பற்றிய தகவல்களை ஒவ்வொரு மாதமும் கண்காணித்து வருகிறது.
சிவில் பதிவு அமைப்பு (CRS) மூலம் ஆதார் எண் கொண்டு ஒரு மாநிலத்தில் பிறப்பு மற்றும் இறப்பு கண்காணிக்கப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்தும் அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் இந்த திட்டத்தில் உள்ள பெண்களின் விவரங்களை CRS தரவு மூலம் கண்காணிக்கின்றனர். தமிழகத்தில் 2022ஆம் ஆண்டு முதல் சராசரியாக ஒவ்வொரு மாதமும் சுமார் 58,000 பேர் உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி பெறும் நபர்களை பற்றிய தகவல்கள் சரியானதா என்பதை உறுதிப்படுத்த வருவாய்த் துறைக்கு தகவல்கள் அனுப்பப்படுகிறது. யாராவது இறந்து விட்டால், அவர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படும். அதிக சொத்துக்கள், நிலம் வாங்கியது அல்லது அரசு வேலை இருந்ததால் உதவி பெரும் பெண்கள் தகுதியற்றவர்கள் என்ற கணக்கில் அவர்களது பெயர்கள் நீக்கப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு மாதமும் சமூகப் பாதுகாப்புப் பொறுப்பாளர், உதவி பெறும் நபர்களின் வங்கிக் கணக்குகள், நிலப் பதிவுகள், வரிக் கணக்குகள் மற்றும் வாகனப் பதிவுகள் ஆகியவற்றைச் சரிபார்க்கிறார். மகளிர் உரிமை தொகை சரியான நபர்களுக்கு சென்று சேருகிறதா என்பதை சரிபார்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த அக்டோபரில் ரூபாய் 1,140 கோடி இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டது. மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பெண்கள் சேர விதிகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த திட்டம் சீராக இயங்குவதை உறுதிசெய்ய எல்லாவற்றையும் டிஜிட்டல் முறையில் மாற்ற வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.
உதவி பெறும் குடும்பங்களுக்கு ஐந்து ஏக்கருக்கு மேல் விவசாய, சதுப்பு நிலம் அல்லது பத்து ஏக்கர் உலர் நிலம் இருக்க கூடாது என்று விதிகள் கூறுகின்றன. மேலும் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 2.5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் மற்றும் கார்கள், டிராக்டர்கள் அல்லது பெரிய வாகனங்கள் எதுவும் வைத்திருக்கக்கூடாது. மேலும், வணிகம் வைத்து இருந்தால் ஆண்டுக்கு 50 லட்சத்திற்கு மேல் வருமானம் இருக்க கூடாது, வருமான வரி செலுத்துபவராக இருக்க கூடாது, ஒரு வருடத்தில் 3,600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தி இருக்க கூடாது. மேலே குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பகுதிக்குள் அவர்கள் இருந்தால் மகளிர் உரிமை தொகை வழங்கப்படாது.
மேலும் படிக்க | விஜய் வாயில் சர்க்கரை போடலாம் - கஸ்தூரி பரபரப்பு பேட்டி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ