முன்னால் முதல்வர் ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது

உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டனில் அவர் வாழ்ந்த வேதா இல்லத்தில் இருந்து , மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி ஹாலுக்கு எடுத்து செல்லப்பட்டது. 

Last Updated : Dec 6, 2016, 09:56 AM IST
முன்னால் முதல்வர் ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது  title=

சென்னை: உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டனில் அவர் வாழ்ந்த வேதா இல்லத்தில் இருந்து , மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி ஹாலுக்கு எடுத்து செல்லப்பட்டது. 

மேலும் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்ட ஜெயலலிதா உடல் மீது படை வீரர்கள் மூவர்ண தேசியக் கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்தினர். மேலும் அங்கு உள்ள அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முதலில் அஞ்சலி செலுத்தினர். அங்கு கூடியுள்ள தொண்டர்கள் மற்றும் மக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இதயம் செயலிழந்ததால் ஜெயலலிதா மரணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இதனால் மருத்துவமனை முன் கூடியிருந்த தொண்டர்கள் கதறி அழுதனர்.

பின்னர் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து, போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வேதா இல்லத்திற்கு ஜெயலலிதாவின் உடல் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. 

போயஸ் கார்டன் கொண்டு வரப்பட்ட ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டது. பின்னர் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலுக்கு ஜெயலலிதாவின் உடல் கொண்டு செல்லப்பட்டது.

மக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு இன்று மாலை 4.30 மணி அளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

Trending News