சென்னை தி நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"நான்கு நாட்கள் இலங்கை தீவுக்கு பயணம் மேற்கொண்டேன். மே 1ஆம் தேதி நடைபெற்ற மே தின பேரணியிலும் பங்கேற்றேன். இலங்கையில் வாழும் தமிழ் சொந்தங்களுக்கு மத்திய அரசு சார்பில் 4,000 வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. இன்னும் 10 ஆயிரம் வீடுகள் கூடுதலாக வேண்டும் என இலங்கை தமிழர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் தற்போது மத்திய அரசின் நிதியுதவி மூலம் கூடுதல் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கைக்கு இந்தியா 1.5 பில்லியன் அமெரிக்க டாலரை வழங்கியுள்ளது. அதோடு அரிசி, காய்கறி மருத்துவ பொருட்கள் மற்றும் பெட்ரோலியம் உள்ளிட்டவைகளும் மத்திய அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தருமபுரம் ஆதினம் பட்டின பிரவேசம் விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. பாரம்பரியமாக தொடரும் இந்த நிகழ்ச்சிக்கு தமிழக அரசு திடீரென தடை விதிக்க என்ன காரணம்?. இந்த முடிவை அரசு பரிசீலனை செய்யும் என நம்புகிறோம். கூலிக்காக ஒருவரை தோளில் சுமப்பது தான் தவறு. ஆனால் கடவுளுக்கு இணையாக மதிக்கப்படும் குருக்களை சுமப்பது தவறு இல்லை. குரு என்பவர் அனைத்தையும் துறந்து மக்கள் நலனுக்காக துறவரம் பூண்டவர். அவர் சாமாணியர் அல்ல. எனவே, நாங்கள் மதிக்கும் குருக்களை விருப்பத்தின் பேரில் சுமப்பத்து எப்படி தவறாகும்?
ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கலைஞர் கூட இதனை தடை செய்யவில்லை. ஆனால், ஸ்டாலின் அரசு தடை செய்வதன் அவசியம் என்ன? பட்டின பிரவேசம் கண்டிப்பாக நடைபெறும். தருமபுரத்திற்கு நானே சென்று பல்லக்கை தூக்குவேன். ஆசை, பற்று அனைத்தையும் தாண்டியவர்கள் குருமார்களை தமிழக அரசு மிரட்டுகிறது. அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இதனை உடனடியாக முதல்வர் கைவிட வேண்டும். அதுமட்டுமின்றி இந்த பட்டின பிரவேசத்தையே முதலமைச்சர் முன் நின்று நடத்த வேண்டும் என்பது எனது கோரிக்கை.
மேலும் படிக்க | பட்டினப்பிரவேசமும் ஆதீனங்களின் குமுறலும்: மத்திய அரசிடம் செல்லுமா புகார் பட்டியல்
திமுகவின் ஓராண்டு ஆட்சி சாதனை என்பதை விட சோதனை என்று தான் சொல்ல வேண்டும். தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் வாரம் ஒரு கொலை நடைபெறுகிறது. இது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை டிஜிபி தெரிவிக்கின்றார். ஆனால், இதனால் என்ன பலன் கிடைத்துள்ளது?. எந்த குற்றவாளிகளும் இதுவரை கண்டறியப்படவில்லை.
கிழக்கு கடற்கரை சாலை மத்திய நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ளது. இந்த சாலைக்கு கலைஞர் கருணாநிதி பெயர் வைப்பதை விட G square சாலை என பெயரிடுவதே பொருத்தமாக இருக்கும். ஏனெனில் இந்த நிறுவனத்தின் விளம்வரம் தான் சாலையின் இருபுறமும் 10 அடிக்கு ஒன்று உள்ளது. மாநில அரசு பராமரிக்கும் ஒரு நல்ல சாலைக்கு கலைஞர் பெயர் வைக்கட்டும் அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கடற்கரை சாலைக்கு கருணாநிதியின் பெயரை வைத்து அவரை கலங்கப்படுத்த வேண்டாம்.
பாஜக நிர்வாகியாக இருந்த கேடி ராகவன் மீது பாலியல் விவகாரம் தொடர்பாக பாஜக சார்பில் அமைக்கப்பட்ட விசாரணை கமிட்டியிடம் இது வரை யாரும் புகார் அளிக்கவில்லை. புகார் அளிக்கும் பட்சத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்". இவ்வாறு செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை தெரிவித்தார் .
மேலும் படிக்க | மயிலாடுதுறை ஆதீன பட்டின பிரவேச தடை அரசியலாக்கப்படுகிறது: அமைச்சர் சேகர்பாபு
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR