தீப ஒளியில் மிளிர்ந்த கோவை ஈஷா யோகா மையம்

தீபாவளி திருநாளில் கோவை ஈஷா யோக மைய வளாகம் முழுவதிலும் தீபங்கள் ஏற்றி கொண்டாடப்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 15, 2020, 10:41 PM IST
  • தீபாவளி திருநாளில் கோவை ஈஷா யோக மைய வளாகம் முழுவதிலும் தீபங்கள் ஏற்றி கொண்டாடப்பட்டது.
  • நாம் அனைவரும், உலகத்தையே ஒரு குடும்பமாக பாவித்து, அன்பாகவும், ஆனந்தமாகவும் தீபாவளியை கொண்டாடி மகிழ வேண்டும் என அவர் தனது தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறியிருந்தார்.
தீப ஒளியில் மிளிர்ந்த கோவை ஈஷா யோகா மையம் title=

தீபாவளி திருநாளில் கோவை ஈஷா யோக மைய வளாகம் முழுவதிலும் தீபங்கள் ஏற்றி கொண்டாடப்பட்டது.

முன்னதாக சத்குரு வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தி வெளியிட்டிருந்தார்.

அதில், ''நாம் அனைவரும், உலகத்தையே ஒரு குடும்பமாக பாவித்து, அன்பாகவும், ஆனந்தமாகவும் தீபாவளியை கொண்டாடி மகிழுங்கள்,'' இந்த தீபாவளி சற்று வித்தியாசமானது. கொரோனாவை ஏதிர்கொண்டு வரும் சூழலில், தீபாவளியை சமூகத்துடன் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்ற தேவை இல்லை. நமக்குள் அன்பாக, ஆனந்தமாக இருந்தாலே, அதுவே ஒரு கொண்டாட்டம் தான்” என சத்குரு (Sadhguru) கூறியிருந்தார்

எனவே, இந்த கொண்டாட்டத்தை நீங்கள் விடக்கூடாது. தீபாவளி நாளில் நம் வாழ்க்கையில் ஒரு புது வெளிச்சம் வரவேண்டும். இந்த நன்னாளில், உங்கள் நன்மைக்காக ஒரு விளக்கு ஏற்றுங்கள்; குடும்பம், நண்பர்களுக்காக மற்றொரு விளக்கை ஏற்றுங்கள்; மூன்றாவதாக மனித குல நன்மைக்காக ஒரு விளக்கை ஏற்றுங்கள்.

தமிழகம் (Tamilnadu) முழுதும், மக்கள் இந்த மூன்று விளக்குகளையும் ஏற்ற வேண்டும். இதுபோன்ற சூழலில், உலகத்தையே ஒரு குடும்பமாக நினைத்து கொண்டாடினால் தான், நமக்கு முன்னேற்றமும், தீர்வும் கிடைக்கும்.அதேநேரம், நாட்டின் நெசவாளர்கள், பன்முகக் கலாசாரம் கொண்டவர்களாகவும், 120 வகையான கைத்தறிகளை கொண்ட, தேச துாதர்களாக உள்ளனர்.

எனவே, இந்த தீபாவளிக்கு நெசவாளர்களை போற்றும் வகையில், கைத்தறி ஆடைகளை அணிந்து, அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அத்தொழிலையும் பாதுகாக்கவும் செய்வோம்.தமிழக மக்கள் அனைவருக்கும், தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள். என்றார்.

ALSO READ | உலகத்தையே ஒரு குடும்பமாக நினைத்து தீபாவளியை கொண்டாடுங்கள்: சத்குரு

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News