சென்னையில் நேற்று இரவு கன மழை கொட்டித் தீர்த்ததால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
நேற்று இரவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. தாம்பரம், கூடுவாஞ்சேரி, பல்லாவரம், அண்ணாநகர் உட்பட நகரின் பெரும்பாலான பகுதிகளிலும் மழை பெய்தது.
சுமார் ஒரு மணி நேரத்தில் 7 செ.மீ., அதிகமாக மழை பெய்ததால், சாலைகளில் வெள்ளம் தேங்கி நின்றது. இவ்வருடத்தில் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழை பொழிவு இதுதான்.
வெள்ளம் தேங்கி நின்றதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. மழை நின்றதும் ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் சென்றதால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுரங்கப் பாதைகளில் வெள்ளநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.