பாசப் போராட்டம் நடத்தி வரும் குட்டி யானை! தாயின் உடல்நிலையில் முன்னேற்றம்

கோவையில் தாயை விட்டு பிரியாமல் பாசப் போராட்டம் நடத்தி வரும் குட்டி யானை - தாய் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல்!

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 1, 2024, 12:20 PM IST
  • யானைக்கு ஊட்டச்சத்துள்ள பானங்கள்
  • கோவை யானைக்கு தொடரும் சிகிச்சை
  • கிரேன் உதவியுடன் யானை நகர்த்தப்படுகிறது
பாசப் போராட்டம் நடத்தி வரும் குட்டி யானை! தாயின் உடல்நிலையில் முன்னேற்றம் title=

கோவையில் தாயை விட்டு பிரியாமல் பாசப் போராட்டம் நடத்தி வரும் குட்டி யானை - தாய் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல்!

கோவை மருதமலை அடிவாரத்துக்கு உட்பட்ட பகுதியில் பெண் யானை ஒன்று உடல்நல குறைவால் மயங்கிய நிலையில் கிடந்துள்ளது. அருகிலேயே அந்த யானையின் குட்டி சத்தமிட்டு கொண்டே இருந்துள்ளது. இந்நிலையில் வியாழன் அன்று அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட வனத்துறையினர் இந்த யானையின் நிலையை கண்டறிந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.  தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் யானைக்கு சிகிச்சை அளிக்க தொடங்கினர். 

யானைக்கு முழுவதும் குளுக்கோஸ் நீர் சத்து நிறைந்த உணவுகள் மருந்துகள் அளிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது நாளாக வெள்ளியன்றும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஓரளவிற்கு உடல்நிலை தேறிய நிலையில் யானையை கிரைன் உதவியுடன் தூக்கி நிறுத்த மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினர் முடிவு செய்தனர்.

பின்னர் கிரைன் உதவியுடன் யானையை தூக்கி நிறுத்திய வனத்துறையினர் அதன் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் குட்டி யானை பால் குடித்ததை தொடர்ந்து யானையின் உடல் நிலை சற்று தேறி காணப்பட்டது. இருப்பினும் நடக்க முடியாமல் இருந்ததால் அந்த பெண் யானைக்கு உணவளிக்க வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | GDP Growth: உத்வேகத்துடன் உயரும் இந்தியப் பொருளாதாரம்! 7.8% ஜிடிபி! தள்ளாடும் உலக நாடுகள்!

இது குறித்து பேசிய கோவை மாவட்ட கால்நடை மருத்துவர் சுகுமார், உடல் நலக்குறைவால் இருந்த அந்த பெண் யானை 40 வயது மதிக்கத்தக்கது எனவும் அதனுடன் இருந்தது 3 அல்லது 4 மாதம் மதிக்கத்தக்க ஆண் குட்டியானை என தெரிவித்தார்.

ஆனைமலை புலிகள் காப்பகம் கள இயக்குனர் மற்றும் கோவை மாவட்ட வன அலுவலர் தலைமையில் கால்நடை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், யானைக்கு 30 பாட்டில்கள் அளவிற்கு திரவங்கள் ரத்தம் வழியாக செலுத்தப்பட்டதாகவும் அதுமட்டுமின்றி எதிர்ப்பு சத்து பொருட்களும் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

யானைக் கூட்டம் அந்த குட்டி யானையை அழைத்துச் சென்று விடும் என்று எண்ணிய நிலையில் அது நடைபெறாததால் குட்டி யானையை வைத்துக்கொண்டே அந்த பெண் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவித்தார். இன்றைய தினமும் 30 பாட்டில் அளவிற்கு திரவங்கள் மற்றும் எதிர்ப்பு சத்து பொருட்கள் அளித்துள்ளதாக தெரிவித்தார். தற்போது கிரைன் மூலம் தூக்கி நிறுத்தியதை தொடர்ந்து  அந்த யானை சற்று நிற்பதாகவும் குட்டி யானை அந்த தாய் யானையிடம் பால் குடித்து வருவதாகவும் தெரிவித்தார். 

மேலும் படிக்க | கர்மவினைகளை போக்கும் சனீஸ்வரரை சனியன்று வணங்குவோம்! சனீஸ்வர வழிபாடு

சிகிச்சையின் முடிவில் அந்த தாய் யானை குட்டியானையை அழைத்துக் கொண்டு வனப்பகுதிக்குள் செல்ல வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு எனவும் ஆனால் தற்பொழுது அந்தப் பெண் யானைக்கு தசைகள் அனைத்தும் தளர்ந்து காணப்படுவதாகவும் எனவே அதனால் நடக்க முடியவில்லை என கூறினார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு நல்லது நடக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார். மேலும் யானைக்கு இளநீர், தர்பூசணி, லாக்டோஜன் போன்றவை தொடர்ந்து அளித்து வருவதாக வருவதாகவும் தெரிவித்தார். 

தெர்மல் கேமரா மூலம் சோதனை செய்ததில் யானைக்கு உட்புறத்தில் காயங்கள் எதுவும் இல்லை எனவும் ரத்த பரிசோதனை செய்ததில் அதற்கு கல்லீரல் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டதாகவும் உடல் பலவீனம் காரணமாக படுத்து இருந்தது தெரியவந்துள்ளதாக கூறினார். இது போன்ற கல்லீரல் பாதிப்பு பல்வேறு காரணங்கள் ஏற்படலாம் எனவும்  குறிப்பிட்டார்.

இந்த பகுதியில் அதிக பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாகவும் அதனை உட்கொண்டு வருவதாகவும் சில புகார்கள் எழுந்து வருவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், மாடுகளுக்கு பிளாஸ்டிக் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் யானையைப் பொறுத்தவரை எதை உட்கொண்டாலும் 55 சதவிகிதத்திற்கு மேல் ஜீரணமாகி சுமார் 40% வெளியேறும் எனவும் பிளாஸ்டிக் உட்கொண்டாலும் அது சாணம் வழியாக வெளியேறிவிடும் என தெரிவித்தார். இருப்பினும் தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டால் தான் அது பற்றி முழு விவரங்களை தர முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | ராக்கெட் வேகத்தில் இந்திய பொருளாதாரம்! பின்னுக்குச் செல்லும் சீனா! கடனில் தவிக்கும் அண்டை நாடுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News