கடந்த சில நாட்களில், வடபழனி சந்தையில் பணிபுரியும் மைனர் சிறுவன் உட்பட ஆலந்தூர், குன்றத்தூரில் காய்கறி விற்பனையாளர்கள் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காய்கறி விற்பனையாளர் பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், கோயம்பேடு சந்தை உட்பட நகரம் முழுவதும் காய்கறி, பழ விற்பனையாளர்கள் மற்றும் சுமை விற்பனையாளர்களை சோதனை செய்ய கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் G.பிரகாஷ் கூறுகையில், கோயம்பேடு சந்தையில் குடிமக்கள் அனைவரையும் சோதனை செய்யத் தொடங்கியுள்ளதாகவும், கண்டறியப்பட்ட அறிகுறிகளின் அடிப்படையில், அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும், சோதனைமுறையில் நெறிமுறை பின்பற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
READ | கோயம்பேடு சந்தைக்கு வரும் 27, 28ம் தேதிகளில் விடுமுறை...
“அதேபோல், மருத்துவமனைகள், வங்கிகளும் தற்போது ஆபத்தான இடங்களாக இருக்கின்றன, ஏனெனில் இங்கு கூடும் மக்கள் கொரோனாவை பரப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே வங்கி வளாகங்கள் பகுதியிலும் சோதனைகளை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வடபழனி சந்தையில் பணிபுரியும் மைனர் சிறுவன் உட்பட ஆலந்தூர், குன்றத்தூர் காய்கறி விற்பனையாளர்கள் கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது. மேலும் குன்றத்தூர் பகுதியில் மட்டும் ஐந்து விற்பனையாளர்கள் சமீபத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்ற சம்பவம் ஆலந்தூர் சந்தையிலும் நடைபெற்றுள்ளது. எனவே நாங்கள் அனைத்து சந்தை தோழர்களையும் சோதித்து, தேவைப்படும் வரை சந்தை நடவடிக்கைகளை மூடியுள்ளோம் என்றும் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
READ | இந்தியாவில் COVID-19 பரவல் வரும் மே 21-ஆம் தேதிக்குள் கட்டுப்படுத்தப்படும் -SUTD...
சனிக்கிழமையன்று, மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் முழுமையான ஊரடங்கிற்கு முன்னதாக அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேகரிப்பதற்காக, சமூக தொலைதூர விதிமுறைகளை மீறி சந்தைகளில் குவிந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது.