Gossip News Tamil : கோட்டை பக்கம் சென்றுவிட்டு டீக்கடை பக்கம் வேகமாக ஓடிவந்த குசும்பன், ’அண்ணே! இன்னைக்கு ஸ்பெஷலா சுண்டல் தயாராகிட்டு இருக்கு போல’ என்றான். ‘ உன்கிட்டயும் ஏதோ ஸ்பெஷல் இருக்கும் போலயே?’ என டீ மாஸ்டர் சொல்ல, ‘ஆமாண்ணே! சொல்றேன், ’ஒரு கப் சுண்டல் கொடுங்க’ என கேட்டு வாங்கிக் கொண்டு கதையை சொல்ல ஆரம்பித்தான் குசும்பன். ‘ அண்ணே, கேபினட் மாற்றம் இருப்பது உறுதியாக தான் தெரியுது. ஆனால் சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு முன்னால அது வெளியாக வாய்பில்லை. கூட்டத் தொடர் முடிஞ்சதும் முதன்மையானவர் வெளிநாடு போகறதுக்கு முன்னால, இந்த அறிவிப்புகள் எல்லாம் வெளியாக வாய்ப்பு இருக்கு. ஏன் இதை உறுதியா சொல்றேன்னா?, சீனியர்களே கேபினட் மாற்றத்தை அரசல் புரசலா போற இடத்துல எல்லாம் பேசிட்டு வர்றாங்க.
குறிப்பா, குடும்ப வாரிசுக்கு நம்பர் 2 இடம் கொடுப்பதும் உறுதியாகியுள்ளது. தன்னோட பணிகளை குறைக்கவும், 2026ல் வரப்போகிற அரசியல் நெருக்கடிகளை கையாளுவதற்கு பயிற்சி கொடுக்கிற மாதிரியும் இப்போவே வாரிசுவை தயார்படுத்த திட்டமிட்டிருக்கிறார் முதன்மையானவர். ஏன்னா, அவரு ஏற்கனவே இப்படியான இடங்களில் பணியாற்றி வந்ததால், அந்த அனுபவத்தின் அடிப்படையிலும், அரசியல் சூழல்கள் எப்படியெல்லாம் இருக்கும் என தொலைநோக்கா சிந்தித்து இந்த முடிவை எடுத்திருக்கிறாராம். இந்த விஷயத்தில் காட்பாடியார் கொஞ்சம் அப்செட் தானாம். சீனியர்கள் இருக்கிறப்போ, கேபினட்லயே சீக்கிரம் புரோமோஷன் கொடுத்தீங்க, இப்போ ஆட்சிலையும் அவருக்கு நம்பர் 2 கொடுக்கப்போறீங்க.
மேலும் படிக்க | கிசுகிசு : ராஜ்பவனார் டெல்லியில் காட்டிய கடுகடுப்பு, கேபினட்டில் அடுத்த தலைக்கு குறி
நானெல்லாம் அவருக்கு கீழ மட்டுமில்லாமல், அவருகிட்ட ரிப்போர்ட் கொடுக்கனுமா? என ஆதங்கப்படுகிறாராம். காட்பாடி பிரச்சாரத்துல, தம்பிக்கு கீழலையும் வேலை செய்வேன் என சொன்னீங்களேண்ணா, இப்போ ஏன் வருத்தப்படுறீங்கனு கேட்டா, ஏம்பா இது நடக்கும்னு தெரியும், ஆனால் கொஞ்சம் பொறுமை காட்டலாம்ல, அதுக்குள்ள என்ன அவசரம்? என திருப்பி கேட்டிருக்கிறார் காட்பாடியார். இருந்தாலும், இவரை ஈஸியா சாமாதானப்படுத்திக்கலாம்ங்கிற நினைப்பில் இருக்கிறது முதன்மையானவர் தரப்பு. அதுமட்டும் இல்லாம சீனியர்களோட செயல்பாடுகளில் கொஞ்சம் அதிருப்தியில் இருக்கிறாராம் முதன்மையானர். நம்பர் 2ஆக வாரிசைக் கொண்டு வரும் நேரத்தில் கேபினட்டில் சில முக்கிய தலைகளோட துறைகளையும் மாற்றம் செய்யலாம்னு நினைக்கிறாராம்.
ஆனால், ஒரே நேரத்துல இந்த இரண்டு விஷயங்களையும் செஞ்ச நிச்சயம் கட்சிக்குள்ள பிரச்சனை வெடிக்கும் என தெரிஞ்சிக்கிட்டவரு, இப்போதைக்கு சீனியர்களோட துறைய மாத்திட்டு, அப்புறமா வாரிசுக்கு நம்பர் 2 இடத்தை கொடுக்கலாம்ங்கிற ஆலோசனையிலும் இருக்கிறாராம். அவரை பொறுத்தவரைக்கும் நல்லா வேலை செய்யுங்க, ஆட்சிக்கு நல்ல பேரு வாங்கி கொடுங்க, அதுபோதும் தானே கேட்கிறேன்... ஆனால் நீங்களே இப்படி செயல்பட்டா எப்படி? என ஒருசில சீனியர்கள் கிட்ட நேரடியாகவே வருத்தத்தையும் தெரிவிச்சிருக்கிறாரு முதன்மையானவர். அதனால், பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்தவுடன் தான் திட்டமிட்டு வச்சிருக்கிற அறிவிப்புகளை ஒவ்வொன்னா செய்யலாம்ங்கிறது தான் முதன்மையானவரோட இப்போதைய பிளான். அதுக்குள்ள ஏதாச்சும் பண்ணி, அவரோ கோபத்தை கரைச்சிருலாம்னு நினைக்கிறாங்க சில சீனியர்கள். அதனால், யாரு தப்பிக்கிறாங்க? யாரு சிக்கப்போறாங்க? அப்படினு பார்க்கனும்னா பட்ஜெட் கூட்டத் தொடர் முடிஞ்சதும் தெரிஞ்சுக்கலாம்" என சொல்லிவிட்டு சுண்டல் சாப்பிட்டுக் கொண்டே கிளம்பினான் குசும்பன்.
மேலும் படிக்க | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் ! என்ன காரணம் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ