கிசுகிசு : சேட்டைக்காரரின் தகிடுதத்ததால் கலகலக்கும் இயக்குநரின் குடில் கட்சி..!

Gossip, கிசுகிசு : இயக்குநர் கட்சிக்குள்ள நடக்கிற விஷயங்களை ஆடியோ, வீடியோவாக பதிவு செய்து வைத்திருக்கும் சேட்டைக்காரரின், தகிடுதத்தத்தால், அந்த கூடாரமே இப்போது கலகலத்துக் கொண்டிருக்கிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 24, 2024, 05:42 PM IST
  • குடில் கட்சிக்குள் மீண்டும் சலசலப்பு
  • அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோ
  • சேட்டைக்காரர் மீது கடுப்பில் அண்ணன்
கிசுகிசு : சேட்டைக்காரரின் தகிடுதத்ததால் கலகலக்கும் இயக்குநரின் குடில் கட்சி..! title=

Gossip News Tamil : ‘ குசும்பா... உன்னோட டீ சர்ட்ல ‘நான் குசும்பன், நானே குசும்பன்’னு எழுதியிருக்கு.. என்னடா?’ என டீ மாஸ்டர் கேட்க, ‘அதுவாண்ணே, இயக்குநர் கட்சி ஆபிஸ் இருக்கிற குடிலுக்கு போனேன், அந்த ஓதம் கொஞ்சம் அடிச்சிருச்சு’ என்றான் குசும்பன். ’காரணம் இல்லாம நீ போமாட்டீயே’ என டீ மாஸ்டர் துருவி கேட்டார். ‘ விஷயம் ஏதும் இல்லாம, நமக்கு அங்க என்ன வேலை?, எல்லாம் காரணத்தோட தான் போன அண்ணா’ என குசும்பன் சொல்லி முடிக்கிறதுக்குள், ‘என்னப்பா மேட்டர்?’ என அடுத்த கேள்வியை போட்டார் டீ மாஸ்டர். ‘ அண்ணே, இயக்குநர் கட்சி கூடாரம் இப்போ ஆடியோ, வீடியோன்னு கலகலத்துப்போய் இருக்கு. தலைமை பொறுப்புல இருக்கிற இயக்குநர் செம டென்ஷன்ல இருக்காரு. 

அவரு மட்டுமில்ல, முக்கிய பொறுப்புல எல்லா நிர்வாகிகளும் தான். இவங்க கோவம் எல்லாம், ஒரே ஒரு ஆளுமேலதான், அவரு யாருன்னா - நம்ம சேட்டைக்கார தம்பி தான். அவரு கட்சியில இருக்கிற எல்லா நிர்வாகிகள் பேசுன ஆடியோக்களை ரெக்கார்டு பண்ணி வச்சிருக்கார். அது மட்டும் இல்லாம, குடிலே கதின்னு கிடந்த தம்பியோட பர்சனல் விஷயங்களையும், வாய்ஸ்களையும் ரெக்கார்டு பண்ணி வச்சிருக்காரு. அது இப்போ பொதுவெளியில வேற லீக் ஆயிட்டதால, அண்ணம் செம கோவத்துல இருக்காரு.’ என கும்பன் சொல்லும்போது, ‘ஏம்பா, இதை அண்ணன் தான ஊக்குவிச்சாரு, இப்போ கோவப்படுறதுல என்ன நியாயம் இருக்கு?’ என குறுக்கால இடைக்கேள்விய போட்டாரு டீ மாஸ்டர். 

மேலும் படிக்க | கிசுகிசு : பம்பரக் கட்சி வாரிசுவின் துடுக்கு பேச்சு.. நோஸ்கட் செய்யும் சூரிய கட்சி ஜூனியர்கள்..!

‘அண்ணே நீங்க சொல்றது வாஸ்தவம்தான், குடில்ல இருந்த முன்னாள் தம்பிங்க ரெண்டு பேரு அண்ணனவிட ரொம்ப பேமஸ் ஆனப்போ, அவருக்கு அது புடிக்கல. அதனால அவரே, அந்த ரெண்டு தம்பிகளையும் கட்சிய விட்டு நீக்குறதுக்கு சேட்டைக்கார தம்பிய வச்சு ஸ்கெட்ச் போட்டாரு. அதாவது, முன்னாள் தம்பிங்க ரெண்டு பேரும் என்ன பேசுறாங்கன்னு ரெக்கார்டு பண்ணிட்டு வர்ற சொல்லும்போது, அதை அப்படியே கச்சிதமா செஞ்சு முடிச்சாரு இந்த சேட்டைக்கார தம்பி. அப்போ ஆரம்பிச்ச சேட்டைக்கார தம்பியோட இந்த கலை பயணம் எல்லா பக்கமும் பரவ தொடங்கிச்சு. அண்ணன் பேசுனதையே கூட ரெக்கார்டு பண்ணி வச்சிருக்காருன்னா பாருங்களேன்.

இவரோட இந்த அல்ப கலை குறித்து தலைமை நிர்வாகிகள் பலரும் இயக்குநர் அண்ணன்கிட்ட சொல்லியிருக்காங்க. ஆனால் அண்ணன்னோ, இதை ரசித்து விரும்பியதால, சேட்டைக்கார தம்பி மேல எந்த ஆக்ஷனும் எடுக்கல. இடையில ரெண்டு தடவை கண்துடைப்புக்கு கட்சியில இருந்து நீக்கிட்டு, சீக்கிரமே சேர்த்துக்கிட்டாரு. அந்த சமயத்தில தான் கட்சி குடில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளோட குடி கொண்டாட்ட வீடியோ எல்லாம் லீக் ஆச்சு. அடுத்து அண்ணணோட வீடியோ வெளியாகும் என்ற சேதி பரவுன சமயத்தில தான்,  சமாதானப் படலமா இந்த சேட்டைக்கார தம்பிய மீண்டும் கட்சியில சேர்த்துக்கிட்டாங்க.

அதுக்கப்புறமும் சேட்டைக்கார தம்பியோட ரெக்கார்டிங் கலைப்பயணம் தொடர, அதுவே கட்சிக்கு பெரிய வினையா அமைஞ்சிருக்கு. ஏன்னா?, அவரோடபோன்ல இருந்து தான் முக்கிய நிர்வாகிகளோட அண்ணன் பேசுன வாய்ஸ், தம்பிகள் பேசுன வாய்ஸ் ரெக்கார்டு எல்லாம் வெளியாகிட்டு இருக்கு. இப்போ லீக்காயிருக்கிறது எல்லாமே பெண் சமாச்சார ஆடியோ. இது கட்சிக்கும், இயக்குநருக்கும் பொதுவெளியில் பெரிய சேதாரத்தை உருவாக்கிடுச்சு. இதனால் செம டென்ஷனில் இருக்கும் அண்ணன், சேட்டைக்கார தம்பிய என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்காரு. வெளியில அனுப்புனா இன்னும் பல சீக்ரெட்டுகள் வெளியாகும், உள்ளே வச்சிருந்தா மத்தவங்க எல்லாம் சிட்டா பறந்துருவாங்க என்ற கிடுக்குப்பிடி நிலையில குடில் கட்சியோட தலைமை பொறுப்புல இருக்கிற இயக்குநர் அண்ணன் இருக்காரு" என சொல்லி முடித்துவிட்டு, டீ மாஸ்டருக்கு ஒரு சலாமும் போட்டுவிட்டு கிளம்பினான் குசும்பன். 

மேலும் படிக்க | ஆகஸ்டில் மாணவர்களுக்கு டபுள் குஷி காத்திருக்கு... பள்ளி எத்தனை நாள்கள் லீவ் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News