விவசாயிகளுக்காக புதிய 'ரேடியோ டூ உழவன் ஆப்'

தமிழக விவசாயிகள் அதிநவீன பாதையில் நடைபோட உள்ளார்கள். இதற்கிடையே, இந்த ஆப் எளிமையாகக் கையாளக்கூடிய வகையிலும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள்!

Last Updated : Mar 16, 2018, 06:56 AM IST
விவசாயிகளுக்காக புதிய 'ரேடியோ டூ உழவன் ஆப்' title=

நேற்று தமிழக அரசின் 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், விவசாயிகளுக்கு உதவும் வகையில் உழவன் ஆப் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இது விவசாயிகளுக்குப் பல வகைகளிலும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.8,916 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கிய அறிவிப்பாக உழவன் ஆப் இடம்பெற்றுள்ளது.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகள் தங்களுக்குத் தேவையான தகவல்களை ஆல் இந்தியா ரேடியோ மூலமாகவே தெரிந்து கொண்டார்கள். அதன்பிறகு சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தின் மூலம் வெளியான வயலும் வாழ்வும் நிகழ்ச்சி, விவசாயிகளுக்குத் தமிழக அரசின் திட்டங்களையும் தகவல்களையும் கொண்டு சேர்த்தது. 

ஆனால், தற்போது பல்வேறு நெருக்கடியான சூழல்களில் உள்ள விவசாயிகள் அரசின் திட்டங்களை முழுமையாக தெரிந்துகொள்ள முடியாத சூழல்களில் உள்ளார்கள்.

அதிகாரிகள் அலட்சியப்படுத்துகிறார்கள். இந்தக் குறையைப் போக்கும் விதமாகவே புதிய செயலி அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழக விவசாயிகள் அதிநவீன பாதையில் நடைபோட உள்ளார்கள். இதற்கிடையே, இந்த ஆப் எளிமையாகக் கையாளக்கூடிய வகையிலும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

Trending News